கடந்த சில வருடங்களாக, மகேந்திர சிங் தோனியின் பேட்டிங்கை உலக ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். தன் முதல் போட்டியில் ரன் அவுட் ஆகி மோசமான முறையில் கிரிக்கெட்டை தொடங்கிய தோனி, தற்போது இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்று அழைக்கப்படுகிறார்.
ராஞ்சியில் பிறந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியின் சிறந்த கேப்டனாக விளங்குகிறார் தோனி. அதுமட்டும் இல்லாமல், ஒருநாள் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாகவும் விளங்குகிறார் மகேந்திர சிங் தோனி. ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி 50. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன் அடுத்தவர்களின் பட்டியலில் இன்னும் சிறிது நாட்களில் இவரும் வந்து விடுவார்.
நீண்ட முடியுடன் முதலில் வந்த தோனி, தனது அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தானுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 148 ரன் எடுத்து அசத்தினார். அடுத்த ஒரு வருடத்தில் இலங்கை அணிக்கு எதிராக 183 அடித்து பட்டையை கிளப்பினார். அதுமட்டும் இல்லாமல், அதே இலங்கை அணியுடன் நடந்த 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு கோப்பையை வாங்கி தந்தார்.
இவ்வுளவு நாள் அவரை வடதுகையில் ஆடியதை பார்த்து கொண்டாடிய ரசிகர்கள், இடது கையில் ஆடினால், ஆட்டம் போட்டு கொண்டாடுவார்கள். அப்படி தோனி இடதுகையில் விளையாடினால், எப்படி இருக்கும் என்று இங்கு பாருங்கள்: