மனிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல், கருண் நாயர் ஆகிய வீரர்கள் இல்லாததால் கர்நாடக பிரீமியர் லீக் எதிர்பார்த்தது போல் இல்லை. ஆனால், டீன் ஜோன்ஸ், பிரெட் லீக் ஆகியோர் வர்ணனை பெட்டியில் இருப்பதால் கர்நாடக பிரீமியர் லீக்கை சில ரசிகர்கள் பார்க்கிறார்கள்.
பெலகவி பாந்தர் மற்றும் பெங்களூரு ப்ளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி வந்திருந்தார். பெலகவி பாந்தர் அணியின் தூதர் வேதா தான்.
அந்த போட்டி முடிந்த பிறகு மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த போட்டி முடிந்தவுடன் கிரிக்கெட் வட்டாரத்தில் உள்ள ஜோடி நேருக்கு நேர் நின்றார்கள்.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் ஸ்டுவர்ட் பின்னி ப்ளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக 46 பந்துகளில் 87 ரன் அடித்தார், அதில் 8 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் அடங்கும். அந்த போட்டி முடிந்த பிறகு தன் கணவரை பேட்டி எடுத்தார் மயந்தி லங்கர், இது அவர்களுடைய வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று, ஏனென்றால் இன்று அவர்களுடைய திருமண நாள்.
https://twitter.com/Ansaf86/status/906125037362704386
இந்திய அணிக்கு மீண்டும் விளையாட முயற்சிக்கிறார் கர்நாடக வீரர் பின்னி. 2014-இல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்டுவர்ட் பின்னி, பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமானார். 6 டெஸ்ட், 14 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பின்னி, 459 ரன்கள் அடித்து 24 விக்கெட் எடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற ஸ்டுவர்ட் பின்னி, ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. கடைசியாக இந்தியாவுக்காக 2016-இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் பங்கேற்றார்.