வீடியோ : ஸ்டம்பிங், தோனி இருக்கும் போது க்ரீசுக்கு வெளியே போகலாமா டாம் லேதம் 1

இந்திய அணி வைத்த 203 இலக்கை துரத்த துவங்கிய நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே தட்டுத் தடுமாறியது. முதல் விக்கெட்டாக சகால் பந்தில் கப்டிலை லாங்க் ஆஃபில் இருந்து செம்ம கேட்ச் பிடித்து வெளியேற்றினார். பின்னர் சற்றும் தாமதிக்காக புவனேஷ்வர் 4ஆவது ஓவரில் தன்னுடைய அற்புதமான யார்க்கர் பந்தால் முன்ரோவை ஸ்டம்பில் தட்டி வெளியே அனுப்பினார்.

அடுத்தடுத்து ரன் சேர்க்க மிகவும் தடுமாறினர் நியூசிலாந்து அணியினர். பின்னர் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் அவர்களாகவே சரிந்து விழுந்தனர்.  ஒரளவிற்கு சோபித்த நியூசிலாந்து அணியின் டாம் லேதம் 36 பந்துகளில் 39 ரன் சேர்த்தார்.

ஆனால், எப்போதும் போல் சகால் பந்தை ஸ்வீப் ஆடியே இன்று ஓட்டிவிடலாம் என்று நினைத்த லேதமிற்கு அதிற்சி வைத்தியம் அளிக்க காத்திருந்தார் சகால். ஒருநாள் போட்டிகளில் ஆடியதை போல் ஸ்வீப் ஆடினார் லேதம், ஆனால் அடுத்தடுத்து தனது கூக்லீக்களால் லேதமை டிசீவ் செய்தார் சகால். பின்னர் வித்யாசமாக பின் பேட்டில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட நினைத்து அதுவும் மிஸ் ஆக , ஸ்டம்பிற்கு பின்னாள் தோனி இருப்பதை மறந்துவிட்டு இறங்கி வந்து அடிக்க நினைத்தார், அந்த பந்தும் மிஸ் ஆக, அழகாக நின்றிருந்த தோனி 6ஆவது ஸ்டம்பில் பந்தை பிடித்து பெய்ல்சை தட்டி டாம் லேதமை வெளியே அனுப்பினார்.

தோனி இருப்பது தெரிந்தும் இறங்கி அடிக்க நினைத்து ஸ்டம்பிங் ஆனவர்கள் பட்டியலில் லேதம் இணைந்துள்ளார்.

அந்த வீடியோ பதிவு கீழே:

 

https://twitter.com/84107010ghwj/status/925762853340155905

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *