இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று அவரது 29ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நேற்றைய நியூசிலாந்து உடனான போட்டி முடிந்தவுடன் வீரர்கள் உடைமாற்றும் அடையில் கோலிய்ன் பிறந்தனாளை பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட கேக் வைத்துக் கொண்டாடினர்.
#HappybirthdayVirat pic.twitter.com/SeFCAxttIG
— BCCI (@BCCI) November 4, 2017
வழக்கமாக போட்டியின் போது இந்திய அணியினருக்கு பிறந்தநாள் வந்துவிட்டால் எப்போதும் அவர்களது முகத்தில் கேக்கினை எடுத்து முக்கி அட்டாகசம் செய்து தான் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள் இந்திய வீரர்கள்.
அதே போல் விராட் கோலிக்கும் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அந்த வீடியோ பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
View this post on InstagramA post shared by CricShots® (@cricshotsofficial) on
இப்படி வீரர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் நேற்றைய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிராக 40 ரன் விதயாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால், கேப்டன் கோலி வழக்கம் போல் கோலி அதிரடியாக ஆடி 42 பந்துகளுக்கு 65 ரன் குவித்தார்.
ஆனால், இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதல் முறையாக கோலி தலைமையில் நியூசிலாந்தை வென்றது. மேலும், கோலி தலைமையிளான இந்திய அணி அடுத்த்டுத்து 7 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.
இலங்கையில் 22 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. நேற்றைய போட்டியில் கோலி அடித்த 65 ரன் மூலம் , சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியளில் இரண்டாவது இடம் பிடித்தார் கோலி. 1943
முதல் இடத்தில் முன்னாள் நியூசிலாந்து வீரர் ப்ரெண்டன் மெக்கல்லம் 2140 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். கோலி, 1943 ரன்னுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மேலும், ஒருநாள் போட்டிகளிலும் அடுத்தடுத்து பல சாதனைகளைப் படைத்து வருகிறார் கோலி. சமீபத்தில் நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் 2 சதங்கள் அடித்து மொத்தம் ஒருநாள் தொடரில் மட்டும் 32 சதங்கள் அடித்துள்ளார்.
சர்வதேச ஒர்நாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் முதலிடத்தில் உள்ளார். கோலி 194 ஆட்டங்களில் 32 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதிவேகமாக 9000 ஒருநாள் போட்டி ரன் அடித்த வீரகள் பட்டியளிலும் முதலிடம் பித்தார் கோலி. இந்த சாதனையை 194 ஆட்டகங்களில் செய்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.