இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முன்னாள் கேப்டன் தோனி இடம் சில அறிவுரைகளை கேட்டு தன் கேப்டன் பொறுப்பில் இருந்து முன்னேறி வருவதாக இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
தோனி 2014-2015இல் ஆஸ்திரேலியா அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் இதனால் விராட் கோஹ்லி முதல் முதலில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பு ஏற்றார்.
அதற்கு பிறகு விராட் கோஹ்லி இந்திய அணிக்கு தொடர்ந்து வெற்றியை கொடுத்தார. இலங்கை, பங்களாதேஷ்,நியூஸிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தொடர்ந்து வெற்றியை கொடுத்தார்.
தற்போது இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை அபாரமாக வெற்றி பெற்றது.
விராட் கோஹ்லியை பற்றி ரவி சாஸ்திரி கூறியது :
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முன்னாள் கேப்டன் தோனி இடம் சில அறிவுரைகளை கேட்டு தன் கேப்டன் பொறுப்பில் இருந்து முன்னேறி வருகிறார். நான் இதுவரை கிரிக்கெட் துறையில் கிரிக்கெட் வீரராகவும், வர்ணனையாளராகவும், இயக்குனராகவும் 35 வருடமாக உள்ளேன். சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை கோஹ்லியை தவிர வேறு யாரும் முறியாது நான் பார்த்ததில்லை ” என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
தற்போது இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல் விளையாடுவர் என்று எதிர் பார்க்க படுகிறது.
நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 304 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிட்ட தக்கது.