வேற வழி தெரியல… விராட் கோலிக்கு பதிலாக புஜாராவை அணியில் எடுக்காதது ஏன்..? விளக்கம் கொடுத்த ரோஹித் சர்மா
இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதிலாக, புஜாராவிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்காததற்கான காரணத்தை இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
சமகால கிரிக்கெட்டின் சிறந்த இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் துவங்க உள்ளது.
இந்தநிலையில், இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு பதிலாக புஜாராவிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்காததற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “நாங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவதால் விராட் கோலிக்கு பதிலாக புஜாராவை மீண்டும் அணியில் எடுக்க நாங்கள் விரும்பவில்லை. அதற்கு பதிலாக இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பதே சரியாக இருக்கும். இதன் காரணமாகவே சீனியர் வீரரான புஜாராவிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, தனிப்பட்ட காரணங்கள் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.