என்னது எங்களுக்கு தகுந்த மாதிரி பிட்ச் ரெடி பண்ணி தான் ஜெயிக்கிறோமா? - நியூசிலாந்து அணியின் குற்றச்சாட்டுக்கு இந்திய பவுலிங் கோச் பதிலடி! 1

குறைந்த ஸ்கொர் அடிக்கும்படியான பிட்ச்சை தயார் செய்யச்சொல்லி இந்திய அணி வற்புறுத்துகிறதா? என்கிற கேள்விக்கு பரஸ் மாம்பரே பதில் கொடுத்திருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டி லக்னோ மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த மைதானம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்ததால் இரு அணிகளும் 4 ஸ்பின் பவுலர்களை பயன்படுத்தினர்.

2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியால் அதிரடியாக விளையாடமுடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது. 20 ஓவர்களில் வெறும் 99 ரன்கள் மட்டுமே எடுத்து 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

என்னது எங்களுக்கு தகுந்த மாதிரி பிட்ச் ரெடி பண்ணி தான் ஜெயிக்கிறோமா? - நியூசிலாந்து அணியின் குற்றச்சாட்டுக்கு இந்திய பவுலிங் கோச் பதிலடி! 2

அடுத்ததாக, சிறிய இலக்கை சேஸ் செய்த இந்திய அணியாலும் இந்த மைதானத்தில் எளிதாக ரன்களை அடித்திட முடியவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறி அவுட்டானார்கள். கடைசி ஓவர் வரை நின்று, நியூசிலாந்து தாக்குதலை சமாளித்து சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சேர்ந்து இந்தியாவிற்கு வெற்றியை பெற்றுத் தந்தனர்.

இரண்டாவது டி20 போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்பதற்காகவே மைதானத்தை தங்களுக்கு ஏற்றாற்போல இந்திய அணி தயார் செய்துகொண்டது என்று நியூசிலாந்து சார்பில் சில குற்றச்சாட்டுகள் வந்தன. சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தியாய் பரவியது.

ஆகையால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரிடம் பிட்ச் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பரஸ் மாம்பரே கூறுகையில்,

என்னது எங்களுக்கு தகுந்த மாதிரி பிட்ச் ரெடி பண்ணி தான் ஜெயிக்கிறோமா? - நியூசிலாந்து அணியின் குற்றச்சாட்டுக்கு இந்திய பவுலிங் கோச் பதிலடி! 3

“பிட்ச் தயாரித்த விதத்தைப் பற்றி கேட்க வேண்டுமென்றால், நீங்கள் மைதானத்தின் மேற்பார்வையாளரிடம் கேட்க வேண்டும். அவர் மட்டுமே இதற்கு பொறுப்பு. இந்திய அணி எந்த வகையிலும் பிட்ச் விஷயத்தில் தலையிடாது. தலையிடவும் உரிமை இல்லை.

போட்டிக்கும் முந்தைய நாள் பயிற்சியில் ஈடுபடுகையில் நான் முதன்மை பிட்ச் பற்றி தெரிந்துகொள்வதற்காக பார்த்தேன். ஆங்காங்கே புற்கள் இருந்தது. பந்து நன்றாக டர்ன் மற்றும் பவுன்ஸ் ஆகும் என்று புரிந்து கொண்டேன். இதற்கு வேகப்பந்துவீச்சாளர்கள் சரி வர மாட்டார்கள். சுழல் பந்துவீச்சாளர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து திட்டமிட்டோம்.

முடிந்தவரை 130-140 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் அல்லது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் 140+ ரன்கள் வரை அடிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தோம். முதலில் பந்துவீசி 99 ரன்களுக்கு அவர்களை கட்டுப்படுத்த முடிந்தது நம்பிக்கையை கொடுத்தது.

என்னது எங்களுக்கு தகுந்த மாதிரி பிட்ச் ரெடி பண்ணி தான் ஜெயிக்கிறோமா? - நியூசிலாந்து அணியின் குற்றச்சாட்டுக்கு இந்திய பவுலிங் கோச் பதிலடி! 4

ஆனாலும் இதை சேஸ் செய்கையில் இந்திய பேட்ஸ்மேன்களும் திணறினர். நாங்கள் பிட்ச் விஷயத்தில் தலையிட்டிருந்தால், ஏன் எங்களால் பேட்டிங்கில் எளிதாக சேஸ் செய்ய முடியாமல், கடைசிவரை ஆட்டத்தை எடுத்துச் சென்றோம்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *