நாங்கள் ஒன்றும் ஹோட்டலில் ஜாலியாக இருக்கவில்லை : ரிப்போர்ட்டர் மீது பாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் 1

இந்திய-நியூசிலானது இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் சொதப்பியதால் 40 ரன் விதயாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்யில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி துவக்கதிலிருந்தே அதிரடியாக ஆடி இந்திய பந்து வீச்சாளர்களை நிலைகுழைய செய்தது.

பந்து வீச்சிற்கு சாதகமில்லாத மந்தமான அந்த ராஜ்கோட் ஆடுகளத்தில் வேகப்பந்து வீசுவது இந்திய வீரர்களுக்கு சற்று கடினமான வேலையாகவே இருந்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு 196 ரன்னை வாரி வழங்கினர். மேலும், வெரும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இந்திய பந்து வீச்சாளர்களால் வீழ்த்த முடிந்தது.Jasprit Bumrah, Rajkot, India Vs New Zealand, Wicket, Colin Munro, Hundred, Optional Practice, Virat Kohli, MS Dhoni

இந்த பந்து வீச்சைப் பற்றி இந்திய அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா கூறியதாவது,

புதிய பந்தில் வீசும் போது ஆடுகளம் மிகக் கடினமான ஒன்றாக இருந்தது. பந்து பேட்டிற்கு மிக எளிதாக சென்றுகொண்டிருந்து. இதனால், நியூசிலாந்து வீரர்கள் ஒரு நல்ல துவக்கத்தை ஏற்ப்ப்டுத்திக்கொண்டனர். 

என்று கூறினார் பும்ரா.

மேலும், இரண்டாவது போட்டிக்கு முன்னதாக நடந்த வலைப்பயிற்சியில் ஏன் கலந்து கொள்ளவில்லை எனக் கேட்டபோது, தனது பதில்களால் நிரூபர்கள் மீது பாய்ந்தார் பும்ரா,Jasprit Bumrah, Rajkot, India Vs New Zealand, Wicket, Colin Munro, Hundred, Optional Practice, Virat Kohli, MS DhoniMunro smashed 58-ball unbeaten 109. Photo Credit: BCCI.

‘நாங்கள் கிட்டத்தட்ட 6 மாதங்களாக அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகள் விளையாடி வருகிறோம். நாங்கள் மீண்டும் களத்தில் உற்சாகமகா வருவதற்கும், விளையாடுவதற்க்கும் ஹோட்டலிலும் சில பயிற்சிகளை செய்கிறோம். நாங்கள் ஒன்ரும் அங்கு சும்மா இருக்கவில்லை. இந்த போட்டியில் வென்றிருந்தால், கேள்விகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும். ஆனால், பரவாயில்லை.

என நிரூபர்கள் மீது பாய்ந்தார் பும்ரா

மேலும், அவர் இந்திய வீரர்கள் தவறவிட்ட கேட்சுகளைப் பற்றியும் கூறினார்.

Jasprit Bumrah, Rajkot, India Vs New Zealand, Wicket, Colin Munro, Hundred, Optional Practice, Virat Kohli, MS DhoniMan of the Match, Munro also picked a wicket of debutant Shreyas Iyer. Photo Credit: BCCI.

இந்த போட்டியைப் பொருத்தவரை எவ்வளவு போராடினோம் எனபதில் தான் இருக்கிறது. எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராடினோம். முன்ரோவிற்கு தவறவிட்ட சில கேட்சுகளைப் பிடித்திருந்தால் போட்டி அப்படியே மாறியிருக்கும்.

எனவும் கூறினார் பும்ரா.

மேலும், அவர் போட்டியை பற்றியும் கூறினார்,

நாங்கள் அவர்களின் மீது ப்ரெஷர் போட நினைத்தோம். ஆனால் , அது நடக்கவில்லை. கிரிக்கெட்டில் எப்போதும் நாம் நினைப்பது நடப்பதில்லை.Jasprit Bumrah, Rajkot, India Vs New Zealand, Wicket, Colin Munro, Hundred, Optional Practice, Virat Kohli, MS DhoniBumrah contained Kiwi batsmen but went wicket-less. Photo Credit: BCCI.

இப்படியான மோசமான சூழ்நிலைகள் இருந்தும் ஜஸ்பிரிட் பும்ரா அற்புதமாக பந்து வீசினார். 4 ஓவர்கள் வீசி விகெட் எடுக்கவில்லை என்றாலும் வெறும் 23 ரன் மட்டுமே கொடுத்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *