ஒருநாள் தொடரில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவதற்கு காரணம் என்னவென்று கேன் வில்லியம்சன் பேட்டியில் கூறினார்.
நியூசிலாந்து-இந்தியா அணிகள் விளையாடிய மூன்றாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை செய்தது. இப்போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடத்தப்பட்டது.
இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க திணறினர். மிடில் ஆர்டரில் பண்ட், சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா போன்றொரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். வாஷிங்டன் சுந்தர் 51 ரன்கள் எடுக்க, ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களில் அவுட்டாகி, ஹாப்-செஞ்சுரி அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 47.3 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர் பின் ஆலன், பவுண்டரிகளை ஆரம்பத்தில் இருந்தே அடிக்க துவங்கியது இந்தியாவிற்கு சிக்கலை உண்டாக்கியது. இவர் அரைசதம் கடந்தபின், 54 பந்துகளில் 57 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
கேன் வில்லியம்சன் ரன் எதுவும் எடுக்காமலும், துவக்க வீரர் டெவான் கான்வே 38 ரன்களுடனும் களத்தில் இருந்தபோது, 18 ஓவர்கள் முடிவில் 104/1 ரன்கள் நியூசிலாந்து அணி எடுத்திருந்தது. அப்போது போட்டியில் மழை பெய்ய துவங்கியது.
பின்னர் மழை இடைவிடாமல் பெய்ததால் ஆட்டம் முடிவினறி ரத்தானது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றிய பிறகு பேட்டியளித்த கேன் வில்லியம்சன் கூறுகையில், “நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். மழை பெய்த போட்டியில் கூட நாங்கள் செயல்பட்ட விதம் பெருமிதமாக இருக்கிறது. டிஎல்எஸ் முறையை நன்றாக தெரியும், 20 ஓவர்கள் விளையாட வேண்டுமென்று. போட்டிக்கு முன்னரே தெரியும் வானிலை மோசமாக இருக்கிறது என்று.
மிட்ச்செல், மில்னே இருவரும் எங்களை முன்னே எடுத்து சென்றார்கள். ஓபனிங் பேட்டிங் அசத்தலாக இருந்ததால் போட்டியை எங்கள் பக்கம் திருப்ப முடிந்தது.
டெஸ்ட் போட்டிகளில் மீது கவனம் செலுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது. தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பிசியாக இருக்கிறோம். டெஸ்ட் போட்டிகளுக்காக சீனியர் வீரர்களுடன் மீண்டும் இணையவுள்ளேன்.” என்றார்.