Cricket, India, West Indies, Second ODI, India's predicted XI

தற்போது வெஸ்ட் இண்டீசில் இந்திய அணி விளையாடி வருகிறது. 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் பயணம் செய்தது. முதல் ஒருநாள் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. இந்த போட்டி மழை காரணமாக, காத்திருந்து காத்திருந்து, போட்டியே நாசமாய் போனது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 199 ரன்னில் இருக்கும் போது 300க்கு மேல் அடிக்கும் என நினைக்கப்பட்டது. ஆனால், அப்போது மழை வந்து குறுக்கிட்டது. சிறிது நேரத்தில் மழை நின்றதும், ஆட்டம் தொடங்க தயாராகினர், ஆனால், மழை மீண்டும் தனது வேலையே காட்டியது. விடாமல் நின்ற மழையால், அந்த போட்டி எந்த முடிவும் இல்லாமல் முடிக்கப்பட்டது.

இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இதே மைதானத்தில் நடக்கவுள்ளது. வானிலையும் அதே போல் தான் இருக்கிறது, மழை நீரை விரைவில் வெளியேற்ற அந்த மைதானத்தில் வேலையாட்களால் முடியாது. இதனால், இந்த இரண்டாவது போட்டியும் மழை காரணமாக போட்டி நடைபெறாமல் போக வாய்ப்பு உள்ளது.

முக்கிய புள்ளிகள்:

வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா - 2வது ஒருநாள் - எதிர்பார்க்கும் இந்திய அணி 1

கடந்த சில போட்டிகளில், இந்திய அணி ஒருநாள் போட்டியில் 300க்கு மேல் அடித்து அசத்தியுள்ளது. அந்த அணியின் தொடக்கவீரர்களின் கையில் தான், இந்திய அணியின் ஸ்கோரே இருக்கிறது.

என்னதான் இவர்கள் சிறப்பாக விளையாடினாலும், மழை என்ற ஓன்று இருக்கிறது. கடந்த போட்டியில் 39.2 ஓவருக்கு 199/2 என்ற நிலையில் இருந்தது. டக்ஒர்த்-லெவிஸ் முறை படி மழை குறிக்கிட்டபோது, 40 ஓவருக்கு 241 ரன் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸுக்கு இலக்காக இருந்தது. விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்தார்கள். மழை குறுக்கிடாமல் இருந்தால், இந்திய அணி கண்டிப்பாக கொடுக்கப்பட்ட 50 ஓவரில் 300க்கு மேல் அடித்திருக்கும்.

எதிர்பார்ப்பது:

வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா - 2வது ஒருநாள் - எதிர்பார்க்கும் இந்திய அணி 2

இந்திய அணியில் குல்தீப் யாதவ் தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடினார். அத்துடன், ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக தொடக்க வீரராக அஜிங்க்யா ரஹானே களமிறங்கினார். சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய அணிக்கும், இந்த அணிக்கும் இந்த மாற்றங்கள் மட்டும் தான். இதனால், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எந்த மாற்றமும் செய்யாமல், இதே அணியுடன் விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி:

அஜிங்க்யா ரஹானே, ஷிகர் தவான், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்.ஸ். தோனி, ஹர்டிக் பாண்டியா, கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *