தனது 18 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை டெல்லியில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் பிறகு முடித்து கொண்டார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. இந்திய அணிக்காக 18 ஆண்டுகளாக விளையாடும் ஆஷிஷ் நெஹ்ரா 12 அறுவை சிகிச்சைகள் பெற்றும் மீண்டும் பல முறை ‘ரீ-ஏன்ட்ரி கொடுத்து இந்திய அணிக்காக விளையாடி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அனைவர்க்கும் பிடித்த ஒரு வீரராய் மாறினார் ஆஷிஷ் நெஹ்ரா.
இதனால், பல வருடங்களுக்காக இந்திய அணிக்காக உழைத்த ஆஷிஷ் நெஹ்ராவுக்கு உலகம் முழுவதும் நன்றி தெரிவித்து வாழ்த்து கூறினார்கள். அப்போது தான், இந்திய அணியின் முன்னாள் தமிழக வீரர் ஹேமங் பதானி, சிறந்த வழியில் ஆஷிஷ் நெஹ்ராவிற்கு நன்றி தெரிவித்தார். அவரின் முகநூல் பக்கத்தில், பாகிஸ்தானுடன் விளையாடிய ஒரு நெருக்கடியான போட்டியில் கடைசி கடைசி யாருக்கு தருவதென்றே தெரியாமல் சவுரவ் கங்குலி குழம்பி கொண்டிருந்தார், அப்போது தான் ‘கவலை படாத தாதா, நான் இருக்க,’னு சொல்லிட்டு நெஹ்ரா கடைசி ஓவரை வீசினார் என்பதை கூறிய அவர் வீடியோவாக பதிவிட்டிருந்தார்.
அப்போது தான் யாருக்கும் பயப்படாத கங்குலிக்கு ஆறுதலாக எப்படி ரன் கட்டுப்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியும் என கூறினார் ஆஷிஷ் நெஹ்ரா.
“2004இல் நடந்த ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அது கராச்சியில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி தான். முதலில் விளையாடிய நாங்கள் 350 ரன் அடித்தோம். அந்த இலக்கை துரத்திய அவர்கள், கடைசி ஓவரில் 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் அணி இருந்தது. அப்போது, கடைசி ஓவர் எந்த பந்துவீச்சாளருக்கு கொடுப்பது என்று மைதானத்தில் அனைவரும் குழம்பி போய் இருந்தார்கள். அப்போது, பைன்-லெக் திசையில் நின்று கொண்டிருந்த ஆஷிஷ் நெஹ்ரா, கங்குலியிடம் ஓடி வந்து “தாதா, நான் ஓவர் போடுற, கவலை படாதீங்க. கண்டிப்பாக உனக்காக இந்த போட்டியை வென்று தருவேன்” நெஹ்ரா கூறினார். அவர் சொன்னதை போலவே கடைசி ஓவரில் முக்கிய விக்கெட்டை எடுத்து 3 ரன் மட்டுமே கொடுத்தார் நெஹ்ரா,” என அந்த வீடியோவில் கூறினார் பதானி.
அந்த முகநூல் பதிவை பாருங்கள்:
“தாதாவிடமே ‘தாதா, கவலை படாதிங்க’னு கூறியவர் நெஹ்ரா. பல காயங்களை பார்த்து சோர்ந்து போனவர் அவர். எப்பொழுதும் போராடிக்கொண்டே இருப்பார். ஓய்வுக்கு பிறகு நீங்கள் ஜாலியாக இருக்க என்னுடைய வாழ்த்தை தெரிவிக்கிறேன்,” என முன்னாள் தமிழக வீரர் ஹேமங் பதானி தெரிவித்திருந்தார்.
இந்த நாளின் சிறந்த வீடியோ: