கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை காலங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம்.
இந்தியவீரர்கள் தென்னாபிரிக்கா உடனான சுற்று பயணத்தில் விடுமுறை நாட்களில் பல பகுதிகளை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். இதுபோல ரோஹித் ஷர்மா ராஹனே மற்றும் அவர்களது மனைவிகளும் உடன் செல்ல.. இவர்களுடன் ஜடேஜாவும் தென்னாபிரிக்கா வன பகுதியை பார்வையிட சென்றுள்ளனர்.
அங்கும் ஜடேஜா தன் குறும்பு தனத்தை விட்டு வைக்கவே இல்லை. அப்படி விளையாட்டாக அவர் செய்த காரியம் அவருக்கும் மற்றவர்களுக்கும் வினையாக போய் முடிந்திருக்கும். மயிரிலையில் தப்பி வந்தனர்.
என்னவென்றால், பல விலங்குகளை பார்த்து ரசித்து கொண்டிருக்கும் போது, சிறுத்தைகள் ஒரு ஓரமாக சாப்பிட்டு கொண்டிருந்தது. சற்றும் எதிர் பாராமல் ஜடேஜா அவற்றை பார்த்து கூச்சலிட்டு கத்தினார். அவை உடனடியாக, இவர்களை துரத்த துவங்கியது.
இது குறித்து ரோஹித் கூறுகையில், அந்த ஓது நிமிடம் என்ன செய்வதென்றே புரியவில்லை. நெஞ்சம் பதைபதைத்து போனது. இனி ஜடேஜாவுடன் செல்லவே கூடாது என்று தான் தோணியது.
இது ஒன்றும் புதிதல்ல, இதேபோல் குஜராத் வன பகுதிக்கு செல்லும் போதும் ஜடேஜா செய்த கூச்சலால் ஆபத்து நேர இருந்தது. இப்போது மீண்டும் இங்கே. அவருடன் இதுபோல் இனி செல்லவே கூடாது என கூறினார்.
மேலும், ராஹனே இது பற்றி கூறுகையில், “அந்த தருணத்தில் தான் எங்கள் மனைவிகள் எங்களைவிட தைரியம் உடையவர்கள் என புரிந்தது. எனினும் அவர்களுக்கு எந்த வித ஆபத்தும் நேர்ந்திட கூடாது என்பதே எங்கள் எண்ணம். சில நேரங்களில் என்ன செய்கிறோம் என்பதையே ஜடேஜா யோசிப்பது இல்லை. இனி அவருடன் செல்லும் போது எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.
ரோஹித் ஷர்மா, ” அந்த நேரத்தில் ஜடேஜா முகத்தில் நன்கு குத்த வேண்டும்
என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் நாம் அமைதி காப்பதே சரி என தோன்றி அப்படியே விட்டுவிட்டேன்” என கூறினார்.
விக்ரம் சத்தாயே நடத்தி வரும் ‘வாட் த டக்” எனும் நிகழ்ச்சியில் ராஹனே ரோஹித் இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இவை அனைத்தையும் கலகலப்பாக பகிர்ந்து கொண்டனர்.