ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு வந்துவிட்டால், யார் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்படுவார்? என கருத்து தெரிவித்துள்ளார் வாசிம் ஜாபர்.
வங்கதேசம் அணியுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பாக வென்று விட்டது. 1-0 என்ற கணத்தில் முன்னிலையும் பெற்றுவிட்டது.
ஒருநாள் தொடரின் போது, கட்டைவிரலில் ஏற்பட்ட காயத்தினால் அணியை விட்டு வெளியேறிய ரோகித் சர்மா இரண்டாவது போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்புவதாக அண்ணன் நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். அணி நிர்வாகமும் இது குறித்து முடிவுகள் மேற்கொள்ள உள்ளது.
ஒருவேளை ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு உள்ளே வந்தால், யாரை வெளியில் அனுப்புவது என்ற குழப்பம் அணியில் நிலவுகிறது. ரோகித் சர்மா விளையாடினால், பிளேயிங் லெவனில் இருந்து கே எல் ராகுல் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் வாசிம் ஜாபர். அவர்பேசியதாவது:
“ரோகித் சர்மா அடுத்த டெஸ்ட் போட்டியின்போது மீண்டும் அணிக்கு திரும்புவதாக சொல்கிறார்கள். அப்போது நிச்சயம் கேல் ராகுல் தான் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்படுவார். அவர் தான் மோசமான பார்மில் இருக்கிறார். அடுத்த டெஸ்ட் போட்டியில் ஐந்து பவுலர்கள் பயன்படுத்தப்பட்டால் கேஎல் ராகுல் வெளியில் இருப்பார். ஒருவேளை, கேல் ராகுலை உள்ளே கொண்டு வருவதற்காக நான்கு பவுலர்களுடன் இந்தியா களமிறங்கும் பட்சத்தில், எந்த பவுலர் வெளியில் இருப்பார்? மற்றும் போட்டி எப்படி போகும்? என்பதை பார்ப்பதற்கு நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்.
ஒரு கேப்டனாக அவருக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கிடைத்த இந்த வெற்றிகள் மிகுந்த மகிழ்ச்சியை தரும். ஆனால் ஒரு பேட்ஸ்மேன் ஆக அவர் சரியாக செயல்படவில்லை. இது அவருடைய ஆட்டம் இல்லை. அவருடைய இயல்பான ஆட்டத்திற்கு விரைவில் திரும்ப வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பழைய கே எல் ராகுலை மீண்டும் பார்க்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் ஆக மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபிப்பதற்கான கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.” என்றார்.