11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் டவுன்டானில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 7-வது லீக்கில் இந்திய அணி, 20 ஓவர் கிரிக்கெட்டின் உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது. தொடக்க வீராங்கனைகள் பூனம் ரவுத், மந்தனா, மிதாலி ராஜ் ஆகியோர் அரைசதம் விளாசி அமர்க்களப்படுத்தினர். வெற்றியால் கூடுதல் நம்பிக்கையை பெற்றுள்ள இந்திய வீராங்கனைகள் வெஸ்ட் இண்டீசுக்கும் ‘வேட்டு’ வைப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
ஸ்டெபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. அந்த அணி சரிவில் இருந்து மீள கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 4-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய அணி :
இந்தியா: பூனம் ரவுத், மந்தனா, மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, மேஷ்ரம், ஷிகா பான்டே, ஜூலன் கோஸ்வாமி, எக்கா பிஷ்ட், சுஷ்மா வர்மா, பூனம் யாதவ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி :
வெஸ்ட் இண்டீஸ்: ஹாய்லே மேத்யூஸ், பெலிசியா வால்டர்ஸ், செடீன் நேசன், ஸ்டெபானி டெய்லர் (கேப்டன்), டோட்டின், மெரிசா அகுலெய்ரா, டாலே, அனிசா முகமது, பிளட்செர், ஷகிரா செல்மான், ஷமிலியா கனோல்.
இந்த ஆட்டம் சரியாக இந்திய நேர படி மதியம் 3 மணி அளவில் தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளின் விவரம் :
இங்கிலாந்தின் டான்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 47.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 46, கேப்டன் டெய்லர் 45, சி.என்.நேஷன் 39 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் பெர்ரி 3 விக்கெட்டுகளையும், ஜொனாசென், பீம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போல்டான் சதம்: பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மூனே-போல்டான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 30.1 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தது. மூனே 85 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த கேப்டன் லேனிங் 12 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், போல்டான் சதமடித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 38.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. போல்டான் 116 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 107, பெர்ரி 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டெய்லர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இது போன்று எந்த போட்டியிலும் நடந்தது இல்லை ஆனால் முதல் முதலில் இது போன்று வேடிக்கை ஆன நிகழ்ச்சிகள் இங்கே தான் நடந்து உள்ளது.
இது போன்று இனிவரும் போட்டிகளில் நடக்காதப்படி கிரிக்கெட் சங்கங்கள் சிறந்த முடிவை எடுக்க வேண்டும்.
இந்தியா வேஸ்ட் இண்டீஸ் மோதும் ஆண்கள் அணியில் மாற்றம் :
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடைசி 3 போட்டிகளுக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதல் 2 ஆட்டங்களில் இடம் பெற்றிருந்த ஜோனாதன் கார்டர், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களான கைல் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கான டிரினிடாட் மற்றும் டோபாகோ அணியின் கேப்டனாக இருக்கும் கைல் ஹோப், மேற்கிந்திய் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பரான ஷாய் ஹோப்பின் சகோதரர் ஆவார்.
அதேபோல் அம்ப்ரிஸ், வின்ட்வார்ட் ஐஸ்லேண்ட்ஸ் அணியின் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக உள்ளார்.
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்றுள்ள ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
அணி விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷு, ராஸ்டன் சேஸ், மிகெல் கம்மின்ஸ், கைல் ஹோப், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், எவின் லீவிஸ், ஜேசன் முகமது, ஆஷ்லே நர்ஸ், கிரன் பாவெல், ரோவ்மேன் பாவெல்.