தென்னாபிரிக்கா அணியின் நச்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் இங்கிலாந்து கவுண்டி டி20 போட்டியில் யார்க்சைர் அணிக்காக ஆட அதன் நிறுவனர் அணுகியுள்ளார். இதுகுறித்து டி வில்லியர்ஸ் ஏஜென்ட் முடிவு தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்கரரான டி வில்லியர்ஸ் லிமிடெட் ஓவர்கள் போட்டியில் மிக சிறந்த ஆட்டக்காரர். பந்தை மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சுழன்று சுழன்று அடிப்பதால் இவருக்கு மிஸ்டர் 360 என்ற செல்ல பெயரும் உண்டு. மேலும், டி20 போட்டிகளின் ஸ்பெசலிஸ்ட் எனவும் அனைவராலும் அறியப்படுவார்.

டி வில்லியர்ஸ் சென்ற மாதம் தனது ஓய்வு முடிவை சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்தார். இதில், அனைத்து போட்டிகளிலும் ஓய்வு எடுப்பதாகவும் டி20 போட்டிகளில் ஆட விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் சில தினங்களுக்கு முன் யார்க்சைர் அணி நிறுவனர் மார்ட்டின் டி வில்லியர்ஸ் ஏஜென்டை அணுகியுள்ளார். அவர் டி வில்லியர்ஸ் தங்கள் அணிக்கு ஆடுவதற்கு விருப்பம் தெரிவிப்பதாகவும், அதற்க்கான ஒப்பந்தம் குறித்து பேச விரும்புவதாகவும் கூறினார்.
ஆனால், இதற்கு டி வில்லியர்ஸ் ஏஜென்ட், அவருக்கு ஒரு வருடம் எந்த போட்டிகளிலும் ஆட விரும்பவில்லை, அதற்கு பின்பு தான் ஆட முடிவு செய்ய உள்ளார் என தெரிவித்தார்.

ஓய்வு அறிக்கையில் டி வில்லியர்ஸ், டி20 போட்டிகள் ஆட விருப்பம் தெரிவிப்பதாக கூறினார், அதனால் தான் நாங்கள் அணுகினோம் என கூறினார். ஆனால், எப்போதும் நாங்கள் அவரது முடிவுக்கு காத்திருப்போம். எங்கள் அணிக்காக ஆடுவதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறோம் என யார்க்சைர் நிறுவனர் கூறினார்.
மேலும், டி வில்லியர்ஸ் நல்ல பேட்ஸ்மேன் ஆக மட்டுமில்லாமல், அவரது அனுபவமும் அணிக்கு சிறப்பான வெற்றியை தேடி தரும் என தெரிவித்தார்.
251 போட்டிகள் ஆடியுள்ள டி வில்லியர்ஸ் 6649 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 150 ஆகும்.
2018/19 ம் ஆண்டுக்கான போட்டியில் டி ஆடுவார் என தெரிகிறது. யார்க்சைர் அணியில் தற்போது கேன் வில்லியம்சன், சித்தேஸ்வர் புஜாரா உள்ளனர். டி வில்லியர்ஸ் இணைந்தால் அணிக்கு மேலும் பலம் சேர்க்கும்.