நீங்கள்தான் எங்கள் கேப்டன்:விராத் நெகிழ்ச்சி
எப்போதும் நீங்கள்தான் எங்கள் கேப்டன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, தோனியை புகழ்ந்தார்.
இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி மகேந்திர சிங் தோனிக்கு 300-வது போட்டி. இதையடுத்து நேற்று போட்டித் தொடங்கும் முன், அவருக்கு இந்திய அணி வீரர்கள் இணைந்து கைதட்டல்களுக்கு இடையே சில்வர் பேட் ஒன்றைப் பரிசளித்தனர்.
அப்போது கேப்டன் விராத் கோலி பேசும்போது,
‘இந்திய அணியில் இப்போது இருக்கிற 90 சதவிகிதம் பேர், உங்கள் தலைமையின் கீழ்தான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியிருக்கிறோம்.
அதனால் எங்களுக்கு எப்போதும் நீங்கள்தான் கேப்டன். இந்த நினைவு பரிசை உங்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறோம்’ என்றார்.
இந்தப் போட்டியில், தோனி ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 73 முறை, ஆட்டமிழக்காமல் இருந்த முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்தா வாஸ்,
தென்னாப்ரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் ஆகியோர் முறையே, 72 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்ததே சாதனையாக இருந்தது.