இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் இருந்து கேப்டன் பதவியை வாங்கியது முதல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பாக செயல் பட்டு வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு கேப்டன் பதவியை வாங்கிய விராட் கோலி, தன் முதல் டெஸ்ட் தொடரில் 22-வருடம் கழித்து இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றார். கோலி கேப்டன் ஆன பிறகு இந்திய அணி ஒரே டெஸ்ட் தொடரில் கூட தோல்வி பெறவில்லை.
ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய பிறகு, விராட் கோலிக்கு கேப்டன் பதவியை ஒப்படைத்தார்கள். அதன் பிறகு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை புரட்டி போட்ட விராட் கோலி , இந்திய அணியை சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கும் கூட்டிச்சென்று போனார். ஆனால், அதற்கெல்லாம் முக்கிய காரணம் பீல்டிங், பந்துவீச்சாளர், ரிவ்யூவை சரியாக கேட்க்கும் மகேந்திர சிங் தோனி தான்.
இதை பற்றி கிரிக்கெட் ரசிகர்கள் பேசி வந்த போது, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்த்ர சஹாலும் இதை பற்றி பேசினார்.
“இன்னும் தோனி தான் எங்களின் கேப்டன். சில சமயம் விராட் கோலி மிட்-ஆன் அல்லது லாங்-ஆன் திசையில் நின்றால், எங்களுக்கு ஆலோசனை கூற ஒரு ஆள் தேவை. பந்துவீச்சாளரிடம் வந்து ஆலோசனை கூற கோலியால் முடியும், ஆனால் தோனி அவரை முந்திக்கொள்வார்,” என சஹால் தெரிவித்தார்.
“கோலியை அங்கேயே நிற்க சொல்லி சிக்னல் காட்டுவார் மகேந்திர சிங் தோனி. இதனால், நேரமும் சேமிப்படையும். தோனியிடம் பல அனுபவங்கள் இருக்கிறது. மைதானத்தில் அவருடன் பேச எங்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறது,” என சஹால் கூறினார்.
“அனைவரையும் ஊக்குவித்து கொண்டே இருப்பார் தோனி. அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்று தெரியும், ஆனால் இன்று எங்களின் கேப்டன் தோனி தான்,” என சஹால் மேலும் கூறினார்.
“பேட்ஸ்மேனின் மூளையை அவர் புரிந்து கொள்வார். என்னை கூப்பிட்டு எப்படி பந்து வீசணும் என்று சொல்லுவார். அதை போலவே செய்வேன். அதற்கான ரிசல்ட் கரக்ட்டாக இருக்கும்,” என சாஹல் மேலும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா தொடரின் போது இளம் வீரர்கள் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு தோனி பல ஆலோசனைகள் கொடுத்தார். இதனால் இருவரும் சேர்ந்து அந்த தொடரில் 13 விக்கெட்டுகளை அள்ளினார்கள். இதன் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியுடன் தொடரை வென்றது.