ராகுல் டிராவிட், ஜாஹீர் கான் ஆகியோரின் ஒப்பந்தத்தை ரவி சாஸ்திரி தான் முடிவு செய்ய வேண்டும் – கிரிக்கெட் நிர்வாக குழு

சில நாட்களுக்கு முன்பு தான் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஆனால், அந்த பிரச்சனை இன்னும் ஓயவில்லை. நேற்று ஜாஹீர் கான் வருடத்திற்கு 150 நாளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என சவுரவ் கங்குலி தெரிவித்தார். ஆனால், இன்று அவரின் ஒப்பந்தத்தை பற்றி புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தான் முடிவு எடுக்க வேண்டும் என கிரிக்கெட் நிர்வாக குழுவில் இருக்கும் ஒருவர் தெரிவித்தார்.

சமீபத்தில் இருவருக்கும் சுற்றுப்பயணத்தின் போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆலோசராக நியமிக்கப்பட்டனர். தற்போது, இந்திய அணிக்கு எந்த பந்துவீச்சு பயிற்சியாளரும் இல்லை. பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் இருக்கிறார் ஆனால் வெளிநாட்டு பயணத்தின் போது ராகுல் டிராவிட் ஆலோசராக இருப்பார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

முதலில், பந்து வீச்சாளராக பாரத் அருண் தான் வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ரவி சாஸ்திரி கேட்டு கொண்டார். ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் அதை பற்றி பேசவில்லை. இப்போது ரவி சாஸ்திரியிடம் சாவி இருப்பதால், ராகுல் ட்ராவிட் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோர் வேண்டுமா வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்.

ராகுல் டிராவிட் மற்றும் ஜாஹீர் கானை ஆலோசலராக நியமித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அளித்தது. இதற்கு முன் இந்திய கிரிக்கெட் வாரியம் இதை பற்றி பேசவில்லை. ஆனால், ஜாஹீர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராக வரவேண்டும் என சவுரவ் கங்குலி ஆசை பட்டதால், பந்துவீச்சு ஆலோசலராக ஆனார் ஜாஹீர் கான்.

நேற்று ஜாஹீர் கான் வருடத்திற்கு 150 நாளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என சவுரவ் கங்குலி தெரிவித்தார். அதே போல், ராகுல் ட்ராவிடும் சில தொடர்களை இழப்பார் என தெரிகிறது, ஏனென்றால் ஜூனியர் இந்தியா மற்றும் U19 இந்திய அணியுடன் அவர் பிஸியாக இருப்பார் என தெரிகிறது.

தற்போது, ராகுல் டிராவிட் மற்றும் ஜாஹீர் கானின் முடி ரவி சாஸ்திரி கையில் இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களை வெளியே அனுப்பாது. அப்படி அனுப்பினால், சாஸ்திரி கேட்டு கொண்டிருக்கும் பாரத் அருண் பந்துவீச்சு பயிற்சியாளராக வர வாய்ப்பு இருக்கிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.