முன்னாள் இந்திய வேகபந்து வீச்சாளரான ஜாகிர்கான் பந்து வீச்சு ஆலோசகராக இருக்க விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.
Photo by Shaun Roy – Sportzpics – IPL
விதிகள் மற்றும் வரையரை படி இந்திய கிரிக்கெட் அணிக்காக பயிற்சியாளர், ஆலோசகர் , மருத்துவர் போன்ற எந்த பணிகள் வழங்க பட்டிருந்தாலும் ஐபிஎல் தொடரில் விளையாட்டு வீரராக விளையாட முடியாது . ஆனால் ஜாகிர்கான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து இன்னும் தனது ஓய்வினை அறிவிக்கவில்லை. இதன் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரில் ஜாகிர்கான் விளையாடுவார் என தெரிகிறது.
மேலும் இந்திய அணி பயிற்சியாளரான ரவி சாஷ்திரி ஜாகிர்கானின் ஆலோசனை இந்திய அணிக்கு 10 முதல் 15 நாட்களுக்கு தேவைபடுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவரை இந்திய அணியின் பந்து வீச்சு ஆலோசகராக நியமித்துள்ளதே தவிர அவருக்கு இன்னும் எந்தவித அதிகாரபூர்வமான பணி நியமன ஒப்பந்தத்தை வழங்கவில்லை என தெரிகிறது .
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஜாகிர்கானை பந்து வீச்சு ஆலோசகராக 2019 ஒருநாள் உலககோப்பை நியமித்துள்ளது. மேலும் ரவி சாஷ்திரியை தலைமை பயிற்சியாளரகவும் ராகுல் ட்ரவிட்டை பேட்டிங் ஆலோசகராகவும் நியமித்தது . ஜாகிர்கானை போலவே ராகுல் ட்ரவிட்டிற்கும் அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் போடவில்லை மேலும் ராகுல் ட்ரவிட் இந்தியா ஏ அணிக்கும் 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கும் பேட்டிங் ஆலோசகராகவும் உள்ளார். இதன் காரணமாகவும் ட்ரவிட்டால் இந்திய அணிக்கு தனது சேவையை வழங்க இயலவில்லை.
தற்போது இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் அணி தொடர்பான கட்டமைப்பில் இருக்கும் அனைத்து அலுவளர்களின் ஒப்பந்தத்தையும் நீட்டித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆனால் ஜாகிர்கான் மற்றும் ராகுல் ட்ரவிட் ஆகியோரை பற்றி பிசிசிஐ தரப்பில் எந்தவொரு செய்தி குறிப்பும் இல்லை . அறிவித்து 20 நாட்கள் ஆகியும் பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக எந்தவொரு அழைப்பும் இல்லை என்பதாலும் , மேலும் ஜாகிர்கான் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடும் எண்ணம் இருப்பதாலும் அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்க விருப்பம் இல்லை என தெரிகிறது .