அப்படியே தோனி மாதிரி... யார எப்ப யூஸ் பண்ணனும்னு தெளிவா தெரிஞ்சிருக்கு; ரோஹித் சர்மாவை தோனியுடன் ஒப்பிட்டு பேசிய டாம் மூடி !! 1
அப்படியே தோனி மாதிரி… யார எப்ப யூஸ் பண்ணனும்னு தெளிவா தெரிஞ்சிருக்கு; ரோஹித் சர்மாவை தோனியுடன் ஒப்பிட்டு பேசிய டாம் மூடி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் ரோஹித் சர்மாவை பிரபல கிரிக்கெட் பயிற்சியாளரான டாம் மூடி வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை அசால்டாக வீழ்த்திய இந்திய அணி, தனது அடுத்தடுத்த போட்டிகளில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

அப்படியே தோனி மாதிரி... யார எப்ப யூஸ் பண்ணனும்னு தெளிவா தெரிஞ்சிருக்கு; ரோஹித் சர்மாவை தோனியுடன் ஒப்பிட்டு பேசிய டாம் மூடி !! 2

இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்தநிலையில், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றி  குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரும், பிரபல கிரிக்கெட் பயிற்சியாளருமான டாம் மூடி, இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

அப்படியே தோனி மாதிரி... யார எப்ப யூஸ் பண்ணனும்னு தெளிவா தெரிஞ்சிருக்கு; ரோஹித் சர்மாவை தோனியுடன் ஒப்பிட்டு பேசிய டாம் மூடி !! 3

ரோஹித் சர்மா குறித்து டாம் மூடி பேசுகையில், “இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களிடம் இருந்து ரோஹித் சர்மா பல விசயங்களை கற்றுள்ளார். இதன் காரணமாகவே ரோஹித் சர்மா தற்போது தலைசிறந்த கேப்டனாக திகழ்கிறார். முன்னாள் வீரர் தோனியை போன்றே ரோஹித் சர்மாவும் கேப்டன்சியில் பொறுமையுடன், விவேகத்துடன் செயல்படுகிறார். எப்படிப்பட்ட அழுத்தமான சூழ்நிலையாக இருந்தாலும், தோனியை போன்றே ரோஹித் சர்மா மிக பொறுமையாக கூலாக கையாளுகிறார். அதே போன்று பந்துவீச்சாளர்களையும் ரோஹித் சர்மா சரியாக பயன்படுத்துகிறார். முகமது சிராஜ் நடப்பு உலகக்கோப்பையில் பெரிதாக விக்கெட் எடுக்காவிட்டாலும், அவருக்கு முழு ஆதரவு கொடுத்து அனைத்து போட்டியிலும் ரோஹித் சர்மா வாய்ப்பு கொடுத்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக முகமது சிராஜின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருந்ததால் அவருக்கு உலகக்கோப்பை தொடரிலும் வாய்ப்பு கொடுப்பதே சரியாக இருக்கும், மேலும் இது முகமது சிராஜிற்கு உத்வேகத்தையும், நம்பிக்கையும் கொடுக்கும். தனது வீரர்களுக்கு ஆதரவாகவும், நம்பிக்கையாகவும் இருப்பதே ஒரு சிறந்த கேப்டனின் அடையாளம், அதை ரோஹித் சர்மா சரியாக செய்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *