அத நாங்க முடிவு பண்ண முடியாது... எல்லாமே தல தோனியோட முடிவு தான்; உண்மையை ஓபனாக பேசிய காசி விஸ்வநாதன் !! 1
அத நாங்க முடிவு பண்ண முடியாது… எல்லாமே தல தோனியோட முடிவு தான்; உண்மையை ஓபனாக பேசிய காசி விஸ்வநாதன்

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்பதை தோனியே முடிவு செய்வார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்கே பெரிய அடையாளமாக திகழ்ந்து வரும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அத நாங்க முடிவு பண்ண முடியாது... எல்லாமே தல தோனியோட முடிவு தான்; உண்மையை ஓபனாக பேசிய காசி விஸ்வநாதன் !! 2

கடந்த தொடரில் சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த தல தோனி, அடுத்த ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக போவது  யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது. தோனி ஓய்வை அறிவித்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டனை நியமிக்குமா அல்லது அடுத்த வருட தொடருக்கே சென்னை அணி புதிய கேப்டனை நியமித்துவிடுமா என்ற கேள்வி நிலவி வரும் நிலையில், சென்னை அணிக்காக எப்போது வரை விளையாட வேண்டும் என்பதையும், கேப்டன் பதவி குறித்தும் தோனியே முடிவு செய்வார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அத நாங்க முடிவு பண்ண முடியாது... எல்லாமே தல தோனியோட முடிவு தான்; உண்மையை ஓபனாக பேசிய காசி விஸ்வநாதன் !! 3

இது குறித்து காசி விஸ்வநாதன் பேசுகையில், “அனைத்தையும் தோனியே தான் முடிவு செய்வார்.  இதுவரை தோனி எங்களிடம் எதையும் சொல்லவில்லை. முடிவு தோனியின் கையில் மட்டும் தான் உள்ளது, அவர் எடுப்பதே இறுதி முடிவு. அவர் சொல்வதை நாங்கள் செய்வோம்” என்று தெரிவித்தார்.

ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி; 

தோனி, மொய்ன் அலி, தீபக் சாஹர், டீவன் கான்வே, துசார் தேஸ்பாண்டே, சிவம் துபே, ருத்துராஜ் கெய்வாட், ராஜவர்தன் ஹங்ரேக்கர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மத்தீஷா பதிரானா, ரஹானே, சேக் ரசீத், மிட்செல் சாட்னர், சிம்ரஜித் சிங்,நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலன்கி, மத்தீஷா தீக்‌ஷன்னா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாகூர், டேரியல் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தபிர்சு ரஹ்மான், அவானிஸ் ராவோ.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *