பாலிவுட் நடிகை க்யாரா அத்வானிக்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பற்றி ஒன்றும் தெரியாது போன்றுள்ளது. மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனியின் மனைவி சாக் ஷியாக நடித்தார் க்யாரா அத்வானி.
பல தடைகள் மற்றும் பிரச்சனைகளை தாண்டி இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவை உண்மை ஆகிய மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனியாக நடித்தார் சுஷாந்த் சிங். ரயில்வே நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக இருந்த தோனி இந்திய கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து பல சாதனைகள் புரிந்தார். இதனால் நினைத்ததை விட தோனியின் வாழ்க்கை வரலாறு படம் வசூல் பயங்கரமாக செய்தது.
அனைத்து நடிகர்களும் அனைவரையும் பாராட்டினார்கள். அந்த படத்தில் தோனியின் மனைவி சாக் ஷியை போலவே அற்புதமாக நடித்திருந்தார் க்யாரா அத்வானி. இதனால், க்யாராவை ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அந்த சாக் ஷியே பாராட்டினார். அந்த படத்தில் அற்புதமாக நடித்து, அவரின் கதியை தெரிந்து கொள்ள பல நாட்கள் அவருடன் இருந்தும், இன்னும் தோனியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என க்யாரா அத்வானி கூறுகிறார்.
ஒரு பேட்டியில் மெழுகுவர்த்தி டின்னரில் யாருடன் சாப்பிட ஆசை என கேட்டபோது,” மெழுகுவர்த்தி டின்னர் பற்றி தெரியாது, ஆனால் டின்னர் என்றால் தோனியுடன் சாப்பிட ஆசை படுகிறேன். ஏனென்றால், அவரை பற்றி மேலும் தெரிந்து கொள்வேன்,” என க்யாரா அத்வானி கூறினார்.