இவர் தான் இனி இந்திய அணிக்கு பந்து வீச்சின் தலைவர் : ஆசிஷ் நெஹ்ரா 1

18 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடினாலும் மிகக்குறைந்த போட்டிகளே ஆடியுள்ளார் ஆசிஷ் நெஹ்ரா.  நல்ல ஃபார்ம் மற்றும் திறமை இருந்தும் அடிக்கடி ஏற்ப்படும் காரணமாக அவரால் அணியில் தொடர்ந்து விளையாட முடியாமல் போய்விட்டது.

இதுவரை 18 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார் நெஹ்ரா. ஆனால், 18 வருட சர்வதேச கிரிக்கெட் வாழக்கையில் அதிக போட்டிகள் ஆடவில்லை எனினும் நிறைய நினைவுகள் மற்றும் நண்பர்களை சேர்த்துள்ளதாக நேற்றையை பேட்டியில் தெரிவித்தார்.இவர் தான் இனி இந்திய அணிக்கு பந்து வீச்சின் தலைவர் : ஆசிஷ் நெஹ்ரா 2

ஐ.பி.எல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நெஹ்ரா, புவனேஷ்வர் என ஒரே அணியின் பந்து வீச்சாளர்களாக ஆடியுள்ளனர். தற்போது ஓய்வு பெற்றுவிட்டார் நெஹ்ரா. ஒரு சீனியர் வேகப்பந்து வீச்சாளே என்ற முறையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சிற்கு புவனேஷ்வர் குமார் தலைமை தாங்குவார் எனக் கூறியுள்ளார் நெஹ்ரா.இவர் தான் இனி இந்திய அணிக்கு பந்து வீச்சின் தலைவர் : ஆசிஷ் நெஹ்ரா 3

கடந்த 2012ல் இருந்து இந்திய அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார் புவனேஷ்வர் குமார். துவக்கத்தில் தனது ஸ்விங்கை மட்டுமே பலமாக வைத்து பந்து வீசி வந்த புவனேஷ்வர் தற்போது ஸ்விங் குறையாமல் மணிக்கு 140+ கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருகிறார்.

இதனைப் பற்றி ஆசிஷ் நெஹ்ரா கூறியதாவது,

2017ஆம் ஆண்டு துவக்கத்தில் புவனேஷ்வர் குமார் அப்படி இப்ப்டி என சரியாக பந்து வீச இயலாமல் இருந்தார். அந்த வருட ஐ.பி.எல் தொடர் துவங்கும் வரையில் அப்படி தான் இருந்தார். பின்னர் ஐ.பி.எல் தொடர் துவங்கியதும் தனது ஃபார்மை மீட்டு மீண்டும் இந்திய அணியில் தனக்கான இடத்தை தேடிக்கொண்டார் புவனேஷ்வர்.Bhuvneshwar Kumar

2019 உலகக்கோப்பை வருவதற்குள் ஒருநாள் அணியில் சேர்ந்து விட நான் முடிவெடுத்தேன் ஆனால், புவனேஷ்வர் மிக அற்புதமாக வேகப்பந்து வீச்சிற்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். என்னைவிட ஒருவர் நன்றாக ஆடுகிறார்

என்றால் அவருக்கு அந்த இடத்தைக் கொடுப்பது தான் சரி. யாருக்கும் ஓய்வு பெறும் ஆசை எப்போதும் வராது. நானும் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆடலாம் என்று தான் நினைத்தேன். சச்சினைக் கேட்டால் கூட இன்னும் ஒரு 5000 ரன் அடித்துவிட்டு ஓய்வு பெற்றிருக்காலாம் என்று தான் கூறுவார். New Zealand Tour Of India 2017-18: Statistical Review - 1st T20I

2009ல் அப்போதைய பயிற்சியாளர் கேறி கிறிஸ்டன் மற்றும் கேப்டன் தோனி இருவரும் என்னை மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆட அழைத்தனர். ஆனால், அப்போது 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடிவிட்டு பின்பு யோசிப்போம் என கூறினேன். 2013ஆம் ஆணு டெல்லி அணிக்காக 6 முதல் தரப் போட்டிகளில் விளையாடினேன், அப்போது யோசித்தேன் முதலில் இந்திய அணிக்கக டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கலாம் என்று.

எனக் கூறினார் ஆசிஷ் திவாசிங் நெஹ்ரா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *