Cricket, IPL, IPL 2018, IPL Auction 2018, Chris Gayle

அடுத்த வருட இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்க்கு வீரர்களின் பெயர்களை விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 12ஆம் தேதி தான் கடைசி நாள் என அறிவித்தனர். ஜனவரி 27 மற்றும் 28 அன்று நடக்கும் ஐபில் ஏலத்திற்காக 1122 வீரர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். இதற்கு முன்பு ஜனவரி 4ஆம் தேதி ஒவ்வொரு அணியும் அவர்கள் தக்கவைத்து கொள்ளும் வீரர்களின் பெயர்களை வெளியிட்டது.

இந்த உலகிலேயே புகழ் பெற்ற டி20 லீக் இந்தியன் பிரீமியர் லீக் தான் என்று நாம் அனைவருக்குமே தெரியும். உலகில் இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை கொண்டு, கடந்த 10 வருடமாக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது இந்தியன் பிரீமியர் லீக். மீண்டும் உலக கிரிக்கெட் நட்சத்திரங்கள் 11வது ஐபில் தொடரில் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் ரசிகர்களை உற்சாக படுத்துவார்கள்.

1122 வீரர்களின் பெயரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் அணிகளுக்கு அனுப்பப்பட்டது. அந்த பட்டியலில் 281 சர்வதேச வீரர்களும், சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகாத 838 வீரர்களும் இருக்கிறது. அந்த பட்டியலில் இந்திய வீரர்கள் 778 மற்றும் இந்திய அணியுடன் இணைந்திருக்கும் நாடுகளில் இருந்து 3 வீரர்களும் இருக்கிறார்கள்.

Kolkata Knight Riders captain Gautam Gambhir celebrates his fifty during match 11 of the Vivo 2017 Indian Premier League between the Kolkata Knight Riders and the Kings X1 Punjab held at the Eden Gardens Stadium in Kolkata, India on the 13th April 2017
Photo by Ron Gaunt – Sportzpics – IPL

அந்த பட்டியலில் சில நட்சத்திர இந்திய வீரர்களும் இருக்கிறார்கள் – கவுதம் கம்பிர், யுவராஜ் சிங், ரவி அஸ்வின், ஹர்பஜன் சிங், அஜிங்க்யா ரஹானே, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், முரளி விஜய் மற்றும் பலர்.

அதிரடி வீரர்களான கிறிஸ் கெய்ல், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் லின், இயான் மோர்கன், மிட்சல் ஸ்டார்க் ஆகியோரின் பெயர்கள் ஏலத்தில் வரும் போது அனைத்து அணிகளும் இவர்களை வாங்க கடுமையாக போராடும்.

அதிக சிக்சர், ஐபில், கிறிஸ் லின், டேவிட் வார்னர், ஹர்டிக் பாண்டியா, நிதிஷ் ராணா, கேதர் ஜாதவ்

இந்த வருட ஐபில் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டும் அவரது பெயரை பதிவித்துள்ளார். கடந்த முறை கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக இரண்டு சதம் அடித்து அசத்திய ஹசிம் ஆம்லாவை வாங்கவும் சில அணிகள் போட்டி போடும்.

வெஸ்ட் இண்டீசில் இருந்து டுவைன் பிராவோ, கார்லோஸ் ப்ரத்வெய்ட், எவின் லெவிஸ் ஆகியோரும், ஆஸ்திரேலிய அணியில் இருந்து கிளென் மேக்ஸ்வெல், ஷேன் வாட்சன் ஆகியோரும் ஏலத்தில் அவர்களின் பெயரை பதிவித்துள்ளார்கள்.

இந்த ஏலத்தில் 282 வெளிநாட்டு வீரர்களின் பெயர் உள்ளது, ஒவ்வொரு நாட்டில் இருந்து எத்தனை வீரர்கள் என்று பார்ப்போம்.

1. ஆப்கானிஸ்தான் – 13
2. ஆஸ்திரேலியா – 58
3. வங்கதேசம் – 8
4. இங்கிலாந்து – 26
5. அயர்லாந்து – 2
6. நியூஸிலாந்து – 30
7. ஸ்காட்லாந்து – 1
8. தென்னாபிரிக்கா – 57
9. இலங்கை – 39
10. USA – 2
11. வெஸ்ட் இண்டீஸ் – 39
12. ஜிம்பாப்வே – 7 • SHARE
  Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

  விவரம் காண

  ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!!

  எப்பொழுது : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், ஏப்ரல் 26 இரவு 8 மணியளவில் எங்கே : இராஜீவ்காந்தி சர்வதேச மைதானம்,...

  ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கணிக்கப்பட்ட அணி!!!

  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத் அணி...

  ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!!

  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி...

  இது வின்டேஜ் தல…. கடைசி 7 ஓவருக்கு 100 ரன் சேசிங்!! தோனி, ராயுடுவை புகழந்து தள்ளும் ட்விட்டர் உலகம்!!

  பெங்களூரு: ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ்...

  மான்செஸ்டரில் நடக்கிறது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போர்; முழு அட்டவணை உள்ளே !!

  மான்செஸ்டரில் நடக்கிறது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போர்; முழு அட்டவணை உள்ளே அடுத்த ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் லீக்...