நேற்றைய போட்டியின் வெற்றியால் அதிசயம் நடந்தது. இந்திய அணியை இலங்கை அணி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்து கொள்ளும் என யாரும் எதிர்பார்க்க வில்லை. இந்த வெற்றியினால், இந்தியாவின் வாய்ப்பையும் சிதறவிட்டு, அவர்களின் அடுத்த சுற்று வாய்ப்பையும் தக்கவைத்து கொண்டனர். இதனால் அடுத்து விளையாடும் போட்டிகள் அனைத்துமே காலிறுதி போட்டி போன்றது. இதில் எந்த அணி வெற்றி பெறுமோ அந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
சொற்ப அணி என நினைத்த இலங்கை அணி இந்திய அணியை வீழ்த்தி அதிர்ச்சி தந்தது. 322 ரன் என்னும் கடிமான இலக்கை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை. தொடக்கத்தில் விக்கெட் பறிகொடுத்தாலும், அடுத்து வந்த வீரர்கள் தும்சம் செய்தனர்.அதுதான் அவர்களின் வெற்றிக்கு ரகசியம்.
டிக்கவெல்லாவின் விக்கெட்டிருக்கு பிறகு குணதிலகா மற்றும் குஷால் மெண்டிஸ் ஜோடி எதிரணியின் பந்துவீச்சை பதம் பார்த்து, இரண்டாவது விக்கெட்டுக்கு 159 ரன் சேர்த்தனர். இருவரின் விக்கெட்டும் அடுத்தடுத்து பறிகொடுக்க, அடுத்து வந்த வீரர்கள் எளிதாக இலக்கை எட்டினர்.
இதனால், இந்த பிரிவில் இருக்கும் அணிகள் விளையாடும் போட்டிகள் சுவாரசியமாக இருக்கும். முதலில் இந்தியா vs தென்னாபிரிக்கா மற்றும் அடுத்தது பாகிஸ்தான் vs இலங்கை.
இந்த இலக்கை எட்ட உதவி செய்த குஷால் மெண்டிஸின் 93 பந்தலில் 89 ரன், அவருக்கு ஆட்டநாயகன் விருது வாங்கி தந்தது.
போட்டி முடிந்த பின்னர்,”நல்ல விக்கெட். இந்தியா நல்ல தொடக்கம் கொடுத்தது, இதனால் தவான் சதம் அடித்தார். எனக்கு குணதிலகா சிறப்பாக கம்பெனி கொடுத்தார். ஆனால், அவரை ரன் அவுட் பண்ணதுதான் வருத்தம் அளிக்கிறது. ஆனால், அடுத்து வந்த மத்தியூஸ் மற்றும் குஷால் சிறப்பாக விளையாடினர்,” என ஆட்டநாயகன் விருதை பெற்ற குஷால் மெண்டிஸ் கூறினார்.