இந்தியாவை பற்றி ட்விட்டரில் ஐசிசி பதிவிட்டதை பற்றி அவதூறாக பேசிய பாகிஸ்தான் ரசிகருக்கு செருப்படி கொடுத்தது சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி).
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஜூன் 8ஆம் தேதி மோதின, இந்த போட்டியின் போது இந்திய பேட்ஸ்மேன் அடித்த பந்தை இலங்கை வீரரால் தடுக்க முடியவில்லை, இதனால் பந்து பவுண்டரி கோட்டை தொட்டது.இதனை கண்ட இந்திய ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினர். எதுவும் எழுதாமல் இந்த போட்டோவை மட்டும் ட்விட்டரில் பதிவிட்டது ஐசிசி.
இந்த பதிவை பிடிக்காத பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பொங்கி எழுந்தார்.”ஒரு 5 நிமிஷம் இந்தியாத #@&*#^$ *#^@&# நிறுத்துக்குங்க, ஒரே 5 நிமிஷம் தான்,” என அவர் பதிவிட்டார்.
இந்த பதிவை கண்ட ஐசிசி அடுத்த நிமிடமே சிறப்பாக பதில் அளித்தது.
தென்னாப்ரிக்காவுக்கு எதிராக டக்ஒர்த்-லெவிஸ் முறை படி பாகிஸ்தான் அணி 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை வைத்துதான் ஐசிசி பதிலளித்தது. முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா அணி கொடுக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 219 ரன் மட்டுமே எடுத்தது. இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 119-ரன்னில் இருக்கும்போது, மழை குறுக்கிட்டது. அந்த மழை நிற்காவிட்ட காரணத்தினால், டக்ஒர்த்-லெவிஸ் முறை படி பாகிஸ்தான் அணி 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.