தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளது. இதனால், உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த இறுதி போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய அணியை பற்றி பேசினார்.
இறுதி போட்டிக்கு முன்பு பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, இறுதி போட்டியில் வெல்வோம், அதே அணியுடன் தான் விளையாடுவோம் என்று கூறினார்.
இறுதி போட்டிக்கு முன்பு,”இதுவும் ஒரு சாதாரண போட்டி தான், இந்த போட்டியில் என்ன நடந்தாலும், அதற்கு பிறகு பல போட்டிகள் விளையாடுவோம்,” என விராட் கோலி தெரிவித்தார்.
“நீங்கள் இந்த வகையான சூழ்நிலைகளில் தங்குவதற்கு மிகவும் தளர்வானது, நல்ல முடிவுகளை எடுக்க உதவுவதால் இது நல்லது.” எனவும் கூறினார்.
அணியின் திட்டம் தான் முக்கியமானது. அடுத்த போட்டியில் அதே அணியுடன் விளையாடுவோம் என கூறியிருந்தார். முன்னதாக, அஸ்வின் காயத்தால் அவதிப்படுவதால், அவர் இருப்பாரா இருக்கமாட்டாரா என கேள்விகள் எழுந்தது. ஆனால், அஸ்வின் விளையாடுவார் என கோலி கூறினார்.
அணியின் வரிசை பற்றி கேட்ட போது,”இந்த முக்கியமான பகுதியில், அணியை மாற்றுவது தேவை இல்லாதது,” என கோலி கூறினார்.
“இரண்டு அணியும் கோப்பையை வெல்ல ஆவலுடன் உள்ளோம். இதனால், அனைத்து வீரர்களுமே சிறப்பாக விளையாடுவார்கள்,| என மேலும் அவர் கூறினார்.
தேவை இல்லாத தகவல்களை வலைத்தளங்கள் பரப்பி விடுகின்றன. இதனால், அவற்றை விட்டு ஒதுங்கி நிற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
“மிகப்பெரிய கற்றல் என்பது, சமூக ஊடகங்களைத் விட்டு ஒதுங்கி நிற்க வேண்டும்.. கடினமானது தான், ஆனால் நீங்கள் ஒரு நல்ல மனநிலையில் தங்க முயற்சி செய்ய வேண்டும்,” எனவும் கூறியிருந்தார்.