இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே உலகமே எதிர்பார்க்கும் ஒரு போட்டி தான், இந்த இரண்டு அணிகளும் மைதானத்தில் ஒன்றாக விளையாடினால் அது கிரிக்கெட்டிற்கும் மேல். இந்த சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் ஐசிசி தொடரிகளில் 13 முறை பாகிஸ்தானிடம் வெற்றி பெற்றுள்ளது இந்தியா.
அரசியல் பிரச்சனைகளுக்காக கடந்த சில வருடங்களாக இரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை. கடைசியாக, 2007-இல் பாகிஸ்தான் அணி இருதரப்பு தொடர்களில் விளையாட இந்தியாவிற்கு வந்தது. அதன்பிறகு, இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டும் தான் விளையாடுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானிடம் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு, பாகிஸ்தானுடன் விளையாடுவது உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறது என விராட் கோலி கூறினார்.
“அவர்களுக்கு எதிராக விளையாடுவது சந்தோசமாக இருக்கிறது. பாகிஸ்தான் தான் சிறப்பான எதிரணி. ஒரு கிரிக்கெட் வீரரா சொல்கிறேன், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை நன்றாக அனுபிவித்தேன்,” என விராட் கோலி கூறினார்.
ஐசிசி நிகழ்வு மற்றும் ஆசிய கோப்பையில் மட்டும் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதனால், இதை பற்றி பேச இந்தியா கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் கூட்டம் போட்டது, ஆனால், இருதரப்பு தொடர் நடக்காது என விஜய் கோயல் கூறினார்.
“பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இருக்கும் வரை இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது. பாகிஸ்தானுடன் பேசுவதற்கு முன் இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக இந்திய அரசாங்கத்திடம் விளையாட வேண்டும்,” கோயல் கூறினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 68 பந்துகளில் 81 ரன் அடித்து முதல் இன்னிங்சில் இந்தியா 319 அடிக்க உதவி செய்தார். ஜூன் 8ஆம் தேதி இலங்கை அணியுடன் மோதுகிறது இந்தியா.