தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய வங்கதேசம் அணி, புவனேஸ்வர் குமாரை சமாளிக்க முடியாமல் டக் அவுட் ஆனார் சவுமியா சர்க்கார். அதற்கு அடுத்தபடியாக சபீர் ரஹ்மானும் பெவிலியன் சென்றார்.
இந்த முக்கியமான போட்டியில், எதிர்கொண்ட முதல் பந்தையே பவுண்டரி அடித்தார் சபீர் ரஹ்மான். அதன் பிறகு சும்மா இல்லாமல், அதிரடியாக ஒரு நான்கு பவுண்டரி அடித்து 19 ரன்னுக்கு சென்றார். ஆனால், மற்றொரு பகுதியில் ரன் அடிக்க தமீம் இக்பால் தடுமாறி கொண்டிருந்தார். பும்ரா 6வது ஓவரில் ரன் எதுவும் கொடுக்கவில்லை. அடுத்த ஓவரில் முதல் நான்கு பந்துகளில் ரன் எதுவும் கொடுக்காத புவனேஸ்வர் குமார், அடுத்த பந்தை வைட் பக்கம் வீசினார்.அதை தட்டி விட நினைத்தார் சபீர், ஆனால் பந்து ஜடேஜா கையில் சென்று உட்கார்ந்தது. இந்த விக்கெட் எடுத்தவுடன், இந்திய கேப்டன் விராட் கோலி எகிறி குதித்து கொண்டாடினார். அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:
https://twitter.com/lKR1088/status/875294328536616960