டி.20 உலகக்கோப்பை
இரண்டு இந்திய வீரர்களுக்கு மட்டும் இடம்… டி.20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா

2022 டி.20 உலகக்கோப்பை தொடரில் தன்னுடைய சிறந்த ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

பல எதிர்பார்க்காத திருப்பங்களுடன் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் கோப்பையை கைப்பற்றியது.

இங்கிலாந்து

என்னதான் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தாலும், இந்த தொடரில் சிக்கந்தர் ராஜா, சூரியகுமார் யாதவ், மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் உட்பட வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவர் மனதிலும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிவுபெற்று சில நாட்களான இந்த சமயத்தில் உலகக்கோப்பை தொடர் சம்பந்தமான கருத்துக்கள் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் வட்டத்திலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது, மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தங்களுடைய ஆடும் லெவனாக ஒவ்வொரு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களும் அறிவித்து வருகின்றனர்.

இரண்டு இந்திய வீரர்களுக்கு மட்டும் இடம்... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா !! 1

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் குறித்து மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் குறித்தும் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பேசி வரும் பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா, 2022 உலகக்கோப்பை தொடரின் தன்னுடைய சிறந்த ஆடும் லெவனை தெரிவித்துள்ளார்.

அதில், “இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வெற்றி பெற்று கொடுத்த ஜாஸ்பட்லரை அணியின் கேப்டானாகவும்,விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் மற்றும் துவக்க வீரராகவும் தேர்ந்தெடுத்த ஆகாஷ் சோப்ரா அவரின் துவக்க ஜோடியாக அலெக்ஸ் ஹேல்ஸை தேர்ந்தெடுத்துள்ளார்.

இரண்டு இந்திய வீரர்களுக்கு மட்டும் இடம்... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா !! 2

மேலும் 2022 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள விராட் கோலியை தன்னுடைய ஆடும் லெவனில் மூன்றாவது பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் இவரைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவை நான்காவது இடத்தில் தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா ஐந்தாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் கிளென் பிலிப்ஸை தேர்ந்தெடுத்துள்ளார்.

மேலும் தனது அணியின் ஆல்ரவுண்டர்களாக, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சதாப் கானையும். மற்றும் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடரில் அனைவரது மனதையும் கவர்ந்த ஜிம்பாவே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராஜாவை தேர்ந்தெடுத்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து வேகப்பத்து வீச்சு ஆல்ரவுண்டராக தொடர் ஆட்டநாயகன் விருது பெற்ற சாம் கரணை தேர்ந்தெடுத்துள்ளார்.

சாம் கர்ரான்

மேலும் தனது அணியின் வேகப்பந்து வீச்சாளராக தென்னாப்பிரிக்கா அணியின் அதிவேக பந்துவீச்சாளர் அன்றிச் நோர்ட்சேவையும், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சகீன் அப்ரிடியையும் மற்றும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட்டையும்” ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்த 2022 டி.20 கோப்பைக்கான சிறந்த ஆடும் லெவன்..

ஜாஸ் பட்லர்(c/wk), அலெக்ஸ் ஹேல்ஸ்,விராட் கோலி, சூரியகுமார் யாதவ்,கிளென் பிலிப்ஸ்,சதாப் கான், சிக்கந்தர் ராஜா,சாம் கரன், அன்றிச் நோர்ட்சே,சகீன் அப்ரிடி,மார்க் வுட்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *