இந்திய அணியின் முன்னாள் கிரிக்க்டெ வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய அணியின் டி20 அணியைப் பற்றி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இ.எஸ்.பி.என் கிர்க்கெட் இணையதளத்திற்க்காக அவர் கிரிக்கெட் சம்மந்தமான கூற்றுக்கள் மற்றும் ஆராய்தல் பணியை செய்து வருகிறார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிளான 5ஆவது போட்டி முடிவிற்குப் பின் உடண்டியாக இந்திய டி20 அணியை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம்.
பின்னர் இது சம்மந்தமான கூற்றுக்களை இ.எஸ்.பி.என் இணையதளத்திற்க்காக ஆராய்ந்து கொடுத்தார் ஆகாஷ் சோப்ரா.அப்போது அவர் கூறியதாவது.
யுவராஜ் மற்றும் ரெய்னாவின் புறக்கணிப்பு விந்தையாக உள்ளது :
தினேஷ் கார்த்திக் அவர் உள்ளூர் போட்ட்களில் இவ்வளவு ஆண்டுகளாக மிக நன்றாக செயல்பட்டதற்க்கு பரிசு கிடைத்துள்ளது. டி20க்கு என்றே பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட ஆஷிஷ் நெஹ்ரா அணிக்குத் திரும்பியுள்ளது மகிழ்ச்சி.

ஆனால், சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் புறக்கணிப்பு ஆச்சரியமாக உள்ளது. இந்த புறக்கணிப்பு எதைப் பற்றியது எனத் தெரியவில்லை. அது வெறும் உடல் தகுதி தானா? இல்லை வேறு ஏதாவது இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அஷ்வின் மற்றும் ஜடேஜா இல்லை. அவர்களைப் பற்றிய பேச்சு கூட வரவில்லை. அவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பதால் தேர்வாளர்கள் அப்படியே விட்டிருக்கலாம்.
எனக் கூறினார்.
ரிஷப் பாண்ட்டிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் :
அடுத்த டி20 உலகக்கோப்பை 2020ல் தான் நடக்கப் போகிறது. தற்போது ஆஸ்திரேலியாவுடன் 3 டி20 போட்டிகள் நடக்கவுள்ளது.
அதற்க்குள் ரிஷப் பாண்ட்டிற்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒரு சில வாய்ப்புக்கள் தோனியின் இடத்தில் கொடுத்திருக்கலாம்.
.@cricketaakash analyses India's T20 squad https://t.co/DgVWgqjzrL #INDvAUS
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 2, 2017
இளம் வீரர்களைப் பற்றி பேசினால் மட்டும் போதாது அவர்களுக்கு சரியான வாய்ப்புக்களையும் அமைத்துத் தர் வேண்டும். இந்த டி20 தொடரில் தோனியின் இடத்தில் ரிஷப் பாண்டிற்க்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.
எனக் கூறினார் ஆகாஷ் சோப்ரா.