Cricket, India, Ms Dhoni, Ajit Agarkar, Twitter

நியூசிலாந்து அணியுடனான் இரண்டாவது டி20 போட்டி நேற்று (நவ்.4) ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட்டிங்கில் இந்திய அணி சொதப்பியதால் தோல்வி அடைந்தது. போட்டியின் தோல்வி குறித்து கேப்டன் கோலி இந்திய அணியின் பேடஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். ஒரு சில வீரர்கள் மட்டுமே ஆடினால் போதாது. சரியான நேரத்தில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடாமல் பொய்த்துவிட்டனர், எனக் கூறினார்.

இந்த போட்டியைப் பற்றி முன்னால் இந்திய வீரர் அஜித் அகர்கர் தோனியை சாடியுள்ளார், டி20 போட்டியில் அவருக்கு பதில் வேறு ஒரு நல்ல வீரரை சேர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.டி20 போட்டிகள் எல்லாம் ஏன் உங்களுக்கு? தோனியைக் கேள்வி கேட்கும் அகர்கர் 1

அஜித் அகர்கரின் முழு பேட்டிக் கீழே :

‘டி20 கிரிக்கெட் என்பது எப்போதும் மாறக்கூடியது. டி20 போட்டிக்கு இந்திய அணிக்கு தோனியை விட மிக நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர்.’Ajit Agarkar, BCCI, Team India, Mahendra Singh Dhoni, T20Is, India Vs New Zealand

‘டி20 போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக இன்னும் தேறவேண்டும். தோனியின் அந்த இடத்திற்கு டி20 போட்டியில் வேறு சரியான வீரரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருநாள் போட்டிகளில் தோனி ஓகே தான்’

‘நேற்றைய (இந்தியா-நியூசி,நவ்.4) போட்டியில் தோனி ஆடிய அந்த ஸ்லோவான ஆட்டமும் தோல்விக்கு காரணம் தான். தோனி இறங்கியவுடன் அடித்தாடியிருந்தாலும் கூட அந்த ரன்னை அடித்திருக்க வாய்ப்பு குறைவுதான்.’

‘அவர்(தோனி) கடந்த சில போட்டிகளாக அதிரடியா ஆட சிரமப்படுகிறார். சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறார். ஆனால், டி20 போட்டியில் நமக்கு அவ்வளவு நேரம் எப்போதும் கிடைப்பதில்லை.’Ajit Agarkar, BCCI, Team India, Mahendra Singh Dhoni, T20Is, India Vs New Zealand

‘அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இளம் வீரரை சேர்த்தால் அணிக்கு மேலும் பலமாகும். இந்த போட்டியில் அவர் 10 ஓவர் மீதம் இருக்கும் வேலையில் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால், கோலியுடன் நின்று நிர்ணயிக்கப்பட்ட ரன்னை அடிக்க இயலவில்லை. எந்த ஒரு நல்ல பேட்ஸ்மேனுக்கும் அந்த 10 ஓவர்கள் அளவானது தான்.’Ajit Agarkar, BCCI, Team India, Mahendra Singh Dhoni, T20Is, India Vs New Zealand

“அவர் (தோனி) கேப்டனாக இருக்கும் போது அணியில் சிரமம் தான். ஆனால், தற்போது அவர் ஒரு பேட்ஸ்மேன் மட்டும் தான், இந்தியாவில் திறமையான் பேட்ஸ்மேன்கள் நிறைய உள்ளனர். ஆகவே இந்திய அணியிக்கு அவரின் வெற்றிடம் பெரிதாக பாதிக்கப்போவதில்லை”

என தோனிக்கு மாற்று வீரர் தேடும்படி கூறினார் அகர்கற்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *