இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த 20 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் சிறப்பாக விளையாடி வருகிறார் ஹர்பஜன் சிங். இந்நிலையில், அடுத்த வருடத்திற்கான ஐபில் ஏலத்திற்கு முன்பு ஹர்பஜன் சிங்கை மும்பை அணி தக்கவைத்து கொள்ளவில்லை.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேவுடன் ஜோடியாக சேர்ந்து எதிரணிகளை துவம்சம் செய்துள்ளார் ஹர்பஜன் சிங். ‘கேம் ப்ளண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங்கை பற்றி பேசினார்.

37-வயதான ஹர்பஜன் சிங் தற்போது இந்தியாவிலேயே அனுபவம் வாய்ந்த வீரர் ஆவார். அவர் தற்போது இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கலாம், ஆனால் அவரது காலத்தில் இந்திய அணிக்காக பல போட்டியை மாற்றியுள்ளார் ஹர்பஜன் சிங். அவரிடம் அனுபவம் இருப்பதால், அவரை யாரும் விட்டுவிட மாட்டார்கள் என கும்ப்ளே கூறினார்.அவரது பயமில்லா கிரிக்கெட் விளையாட்டு அவரிடம் இன்றும் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
“அவரிடம் கன்சிஸ்டன்சி இருக்கிறது. அவரால் தற்போது விக்கெட் எடுக்க முடியாமல் இருக்கலாம், ஆனால் ரன் கொடுக்காமல் எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் திறமை அவரிடம் இருக்கிறது. இதனால், அவர் கண்டிப்பாக அவரது திறமையை மீண்டும் நிரூபிப்பார்,” என கும்ப்ளே தெரிவித்தார்.
“கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு அவர் கேப்டன் ஆகலாம். பஞ்சாப் அணியிடம் ஏற்கனவே அக்சர் பட்டேல் இருக்கிறார். இருவரும் சேர்ந்து எதிரணியை நசுக்கி விடுவார்கள். அவரது பேட்டிங்கும் அற்புதமாக இருக்கும். அவர் எப்போது வந்து, எப்போது போட்டியை திருப்புவார் என்று தெரியாது. இதனால், பஞ்சாப் அணிக்கு கண்டிப்பாக இவர் தேவை,” என கும்ப்ளே மேலும் கூறினார்.