நாளை நடக்க இருக்கும் சாம்பியன் ட்ரோபி இறுதி போட்டிக்காக இரண்டு அணிகளும் தற்போது ஓயாமல் பயிற்சியில் ஈடு பட்டு வருகிறார்கள்.
இதை அடுத்து தற்போது பயிற்சியில் மேற்கொண்ட இந்திய அணியின் நட்சத்திர சூழல் பந்து வீச்சாளர் அஸ்வின் க்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வந்து உள்ளது.அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு விட்டது.இதனால் அவர் முழங்காலில் தற்போது காயம் குறைய மருந்துகள் கொடுக்க பட்டு வருகிறது.
இந்த சாம்பியன் ட்ரோபியில் அஸ்வின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வில்லை பிறகு நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசம் அணிக்கு எதிராக விளையாடினார். ஆனால் இந்த போட்டியில் அஸ்வின் விக்கெட்கள் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிட்ட தக்கது.
தற்போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதி போட்டிக்காக அனைவரும் தயாராகி கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டது மிகவும் வருத்தமான செய்தி தான்.
இதுகுறித்து இந்திய அணி தரப்பில் செய்திகள் இன்னும் வந்து அடையவில்லை எனவே நாளை நடக்க இருக்கும் இந்தியா பாகிஸ்தான் மோதும் இறுதி போட்டியில் எந்த எந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரியவில்லை.
இந்த காயத்தினால் நாளைய இறுதி போட்டியில் இந்தியாவின் சூழல் பந்து வீச்சாளர் அஸ்வின் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வி அனைவரிடமும் தற்போது எழுந்து உள்ளது.இது குறித்து வரும் மேலும் முக்கிய செய்திகளுக்காக நாம் அனைவரும் சிறிது காத்து இருக்க வேண்டும்.
தற்போது பாகிஸ்தான் அணியிடம் இருந்து வந்த செய்தி என்ன வென்றால் நாளைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் நடச்சத்திர வீரர் அமீர் விளையாட உள்ளாராம்.
நாளை நடக்கும் சாம்பியன் ட்ரோபி இறுதி போட்டிகள் ஜூன் 18 ஆம் தேதியில் சரியாக மதியம் 3 மணி அளவில் நடக்கும்.