ஏன் தோற்றோம்? கேப்டன் கோலியின் விளக்கம் 1

இந்தியா-நியூசி அணிகளுக்கு இடையிளான இரண்டாவது டி20 போட்டி நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்திய அணியின் சார்பில் ஓய்வு பெற்ற நெஹ்ராவிற்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகம்து சிறாஜ் தனது சர்வதேச அறிமுகப் போட்டியில் ஆடினார். ஏன் தோற்றோம்? கேப்டன் கோலியின் விளக்கம் 2

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்து ஆடினார். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 58 பந்தில் 109 ரன் விளாச, நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன் குவித்தது. இந்திய அணியின் அனைத்து பந்து வீச்சாளர்களையும் நாலாபுறமும் சிதறடித்தார் காலின் முன்ரோ.

அதிகபட்சமாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 4 ஓவர்களுக்கு 53 ரங்கள் வாரி வழங்கினார்.

பின்னர் ஆடிய இந்திய அணியுன் துவக்க ஜோடி சரியாக சோபிக்காததாலும், கேப்டன் கோலிக்கு சரியாக மற்ற பேட்ஸ்மேன்கள் கைகொடுக்காத்தாலும் இந்திய அணி 40 ரன் வித்யாசத்தில்  தோல்வியைத் தழுவியது. ஏன் தோற்றோம்? கேப்டன் கோலியின் விளக்கம் 3

இந்திய அணியின் சார்பில் கேப்டன் 42 பந்துகளுக்கு 65 ரன்னும், தோனி 37 பந்துகளுக்ககு 49 ரன்னும் அடித்தனர்.

ஆட்ட நாயகனாக சதம் அடித்த நியூசிலாந்து அணியின் காலின் முன்ரோ தேர்வுசெய்யப்பட்டார்.

பின்னர் தோல்வி குறித்து இந்தியக் கேப்டன் விராட் கோலி கூறியயதாவது,

பேட்டிங்கில் இன்று நியூசிலாந்து அணியினர் சற்று நன்றாக் செயல்பட்டனர். நாங்களை நிறைய கேட்சுக்ளை விட்டுவிட்டோம். ஒருகட்டத்தில் 225-230 அடிப்பார்கள் என நினைத்தோம் ஆனால் புவனேஷ்வர் மற்றும் பும்ரா ஆகியோர் அற்புதமாக பந்து வீசி கட்டுப்படுத்திவிட்டனர். அவர்களுக்கு பாராட்டுக்கள்.ஏன் தோற்றோம்? கேப்டன் கோலியின் விளக்கம் 4

ஆனால், பேட்டிங்கில் சொதப்பிவ்விட்டோம். கிட்டத்தட்ட 20 ரன்னை சேசிங் செய்யும்போது நம்மில் ஒருவர் எப்படியும் 200+ ஸ்ட்ரைக் கேட்டில் ஆடவேண்டும். அதை செய்ய நான் தவற விட்டுவிட்டோம். முதல் இரண்டு விக்கெட்டுகள் வெகு சீக்கிரத்தில் விழுந்துவிட்டது. பின்னர் சரியாக ரன் சேர்க்க எங்களால் இயலவில்லை.

தோனி இறுதியின் மிக நன்றாக ஆடினார். ஆனால், அப்போது எடுக்க வேண்டிய ரன் மிக மிக அதிகம். பெரிய ஷாட்டுகளை அடிக்க வேண்டிய நேரத்தில் நாங்கள் சரியாக அடிக்கவில்லை.ஏன் தோற்றோம்? கேப்டன் கோலியின் விளக்கம் 5

ஹர்திக் பாண்டிய இது போன்ற தருணங்களில் பல முறை அணியை கரை சேர்த்திருக்கிறார். அவருக்கு இன்னும் நேரம் வேண்டும் என நினைக்கிறோம்.

13-14ஆவது ஓவர்களில் ஆடுகளம் சற்று தனது தன்மையினை மாற்றிவிட்டது. ஆனால், அவற்றையெல்லாம் ஒரு காரணமாக சொல்ல முடியாது. நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை.ஏன் தோற்றோம்? கேப்டன் கோலியின் விளக்கம் 6

ஒத்துக்கொள்கிறோம், நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்பதே உண்மை. ஈரப்பதமும் நாங்கள் எதிர்பார்த்தபடி பந்தில் உக்காரவில்லை. மேலும், துவக்கத்தில் டாசையும் இழந்துவிட்டோம். இன்றைய நாளில் நாங்கள் நன்றாக ஆடவில்லை. அதனால் தோற்றுவிட்டோம்.

எனக் கூறினார் கோலி.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *