சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் ஆப்பு வைத்தது பி.சி.சி.ஐ

சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் போன்ற சீனியர் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருவதற்கு மிக முக்கிய காரணமான, யோ – யோ டெஸ்ட் உடற்தகுதி தேர்வின் புள்ளிகளை 16.1 புள்ளியில் இருந்து 16.5 புள்ளிகளாக பி.சி.சி.ஐ., இன்று மாற்றியமைத்துள்ளது.

சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் ஆப்பு வைத்தது பி.சி.சி.ஐ !! 2

யோ – யோ டெஸ்ட்;

ஒவ்வொரு வீரர்களும் இந்திய அணிக்காக விளையாட  தான் முழு உடற்தகுதி மற்றும் திறமையுடன் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க இதுவே முதற்படி. இந்த தேர்வில் வெற்றி பெறும் வீரர்களை மட்டுமே தேர்வுக்குழுவினர் இந்திய அணியில் இணைத்து கொள்வது பற்றி பரிசீலிப்பார்கள் என்பது பி.சி.சி.ஐ விதிமுறை.

இப்படிப்பட்ட யோ – யோ டெஸ்ட் பற்றி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யோ – யோ டெஸ்ட் என்றால் என்ன என்பதை  சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா தெளிவு படுத்தியிருந்தார். அதனையே இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறோம்.

சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் ஆப்பு வைத்தது பி.சி.சி.ஐ !! 3

ஆஷிஸ் நெஹ்ரா கூறியதாவது  “2001-2002 -ம் ஆண்டுகளில்  இந்திய கிரிக்கெட் அணி நடத்திய பிளிப் டெஸ்ட் போன்றதுதான் இதுவும். அதாவது 20 மீட்டர் தூரத்தை, குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர்கள் வைத்திருக்கிற புள்ளிக்குள் சென்று திரும்ப வேண்டும். அதற்கு இந்திய அணி 16.1 என்ற புள்ளியை நிர்ணயித்துள்ளது. இதற்கு மேல் எடுப்பவர்கள், இந்த தகுதி தேர்வில் வென்றவர்கள். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் 18 என இந்த புள்ளியை வைத்திருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்திய வீரர்களுக்கு புதிய சிக்கல்;

ஏற்கனவே இந்திய வீரர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வரும் இந்த யோ – யோ டெஸ்டின் புள்ளிகளை 16.1ல் இருந்து 16.5 புள்ளிகளாக பி.சி.சி.ஐ., இன்று மாற்றியமைத்துள்ளது. மேலும் மிக விரைவில் இது 17 புள்ளிகளாகவும் அதிகரிக்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.

https://twitter.com/BCCI_Men/status/955108634752516096

யுவராஜ் – ரெய்னாவிற்கு ஆப்பு;

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களும், தங்களுக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங், இந்திய அணியில் பல  மாதங்களாக இடம்பெற முடியாமல் தவித்து வருவதற்கு யோ – யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாதது தான் காரணம் என்று பி.சி.சி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

நீண்ட கால முயற்சிக்களுக்கு பிறகு சமீபத்தில் தான் சுரேஷ் ரெய்னாவும், யுவராஜ் சிங்கும் இந்த தேர்வில் ஒரு வழியாக இந்த தேர்வில் தேர்ச்சி, இந்திய அணியில் ரீ எண்ட்ரீ கொடுக்க காத்திருந்தனர், ஆனால் தற்போது பி.சி.சி.ஐ.,ன் இந்த புதிய விதிமுறை காரணமாக இருவரும் மீண்டும் இந்த தேர்வில் மீண்டும் ஒரு முறை கலந்து கொண்டு வெற்றி பெற்றால் தா இந்திய அணியின் நீள நிற ஜெர்சியை மீண்டும் அணிய முடியும் என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *