Cricket, England, Australia, Ashes, Ben Stokes

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ், ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள இங்கிலாந்து ஒப்புதல் வழங்கியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதும், பிரிஸ்டோலில் உள்ள இரவு விடுதி பாருக்கு தனது நண்பர்களுடன் பென் ஸ்டோக்ஸ் சென்றார். அப்போது பென் ஸ்டோக்ஸ் ஒரு வாலிபரை தாக்கியதாக கூறப்படுகிறது.

Cricket, England, West Indies, ICC, Ben Stokes
இந்த சம்பவத்தால் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இதனால் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஸி. தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு: ஐபிஎல்-க்கு ஒப்புதல் கொடுத்தது இங்கிலாந்து 1

பென் ஸ்டோக்ஸ் விசாரணை வளையத்திற்குள் உள்ளதால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார்.

தற்போது வரை அவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தாவித் மலன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த வருடம் பென் ஸ்டோக்ஸ்-ஐ ரைசிங் புனே வாரியர்ஸ் அணி 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தது. சிறப்பாக விளையாடி அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற பென் ஸ்டோக்ஸ் இறுதிப் போட்டியில் விளையாடாமல் சொந்த நாடு திரும்பினார்.

தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளதால் ஐபிஎல் தொடர் 2018-ல் முழுவதும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *