தற்போது 23 வயதாகும் இளம் வேகப்பந்து ஜோப்ரா ஆர்ச்சர், சஸ்செஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்காக 2019ம் ஆண்டு நடக்க இருக்கும் இங்கிலாந்து அணியில் இடம் பெறுவாரா என்பது குறித்து அணியின் கேப்டன் அயன் மோர்கன் கூறியுள்ளார்.
இளம் வேகப்பந்து வீச்சாளர் பிறப்பில் பார்படன் நாட்டை சேர்ந்தவர். அண்டர் 19 உலககோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடினார். அதன் பின்பு தான் தந்தையின் நாடான பிரிட்டிஷ் க்கு இடம் பெயர்ந்தார்.
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சஸ்செஸ் அணிக்காக ஆடி வருகிறார். இந்த அணிக்காக இவரை பரிந்துரை செய்தது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் ஜோர்டன். இவரது யுக்தி, வேகம், யார்க்கர் இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது இங்கிலாந்து அணியில் இடம் பெறுவார் என பெரிதும் எதிர் பார்க்கப்பட்டது.

இங்கிலாந்து அணியில் இடம்பெற வேண்டும் என்றால் நாட்டின் குடியுரிமை பெற வேண்டும், மேலும் 7 வருடங்கள் தங்கி இருக்க வேண்டும். வருடத்திற்கு குறைந்தது 210 நாட்கள் நாட்டியலேயே தங்கி இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் தான் அணியில் இடம் அளிக்கப்படும்.
2012 ம் ஆண்டு வரை இந்த விதியின் படி, நான்கு வருடங்கள் நாட்டில் இருந்தால் போதும் அணியில் இடம் பெற தகுதி பெறலாம். அதன் பிறகு, இது 7 வருடங்களாக உயர்த்தப்பட்டது.

தற்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் அவதிப்படும் இங்கிலாந்து அணிக்கு ஜோப்ரா ஆர்ச்சர் கிடைத்தது பெரிய சிறப்பு. இதை தக்க வைத்துக்கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய விதியான 7 வருட உயர்வை குறைத்து மீண்டும் 4 வருமா குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த மாற்று விதிக்கு, 11 நபர்கள் கொண்ட குழு சம்மதம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்பே புதிய விதி அமல் படுத்தப்படும். இதுவரை இங்கிலாந்து வாரியம் ஆர்ச்சரை அணியில் சேர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர் 2019 ம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவது சந்தேகம் தான்.
இது குறித்து மோர்கன் கூறியதாவது, “எங்களுக்கு ஆர்ச்சர் போன்றோர் நிச்சயம் தேவை படுகிறது. ஆனால், சில விதி முறைகளில் தகுதி பெறுவது கட்டாயம். அதனால், அவர் குறித்து நாங்கள் எதுவும் யோசிக்கவில்லை. தகுதிக்கான வருடத்தை வாரியம் குறைத்தால், கண்டிப்பாக ஆர்ச்சர் அணியில் இடம் பெறுவார்” என தெரிவித்தார்.
2019ம் ஆண்டு தான் இங்கிலாந்தில் நான்கு வருடங்களை நிறைவு செய்கிறார் ஆர்ச்சர். 7 வருடங்கள் முடிய 2022 வரை அவர் காத்திருக்க வேண்டும். ஆனால், அதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடலாம்.
இவர், கடந்த ஆண்டு ஐபில் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக 7.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.