ஜூன் 8ஆம் தேதி இலங்கைக்கு எதிராக இந்திய அணி தோல்வி பெறும் என யாரும் நினைத்து பார்க்கவே இல்லை. அந்த தோல்வியினால் தற்போது இந்திய அணி வாழ்வா சாவா நிலையில் இருக்கிறது. இந்நிலையில் அடுத்த போட்டியில், நாக்-அவுட் போட்டி என்றாலே ராசி இல்லாத தென்னாபிரிக்கா அணியுடன் விளையாடுகிறது. அந்த போட்டியில் தோற்றால் மறுநாளே இந்தியா வரவேண்டியதுதான்.
இந்திய அணிக்கு ஒரு அபாயகரமான அணி என்றால் அது தென்னாபிரிக்கா அணி என்றும் சொல்லலாம். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலுமே தென்னாபிரிக்கா வலுவான அணியாக உள்ளது. இதனால், தென்னாப்ரிக்காவுடன் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கும். சுலபமாக சொல்லவேண்டும் என்றால், இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு போகும், தோற்றால் வீட்டுக்கு போகும்.
ஆனால், இந்திய அணியில் நிறைய குழப்பங்கள் நீடிக்கிறது. நட்சத்திர வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது ஷமி ஆகியோர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. முதல் போட்டியில் வெற்றி பெற்ற அணி, இரண்டாவது போட்டியில் இலங்கையுடன் தோல்வியே மிஞ்சியது.
சமீபத்திய பார்ம்:
இலங்கைக்கு எதிரான போட்டியில் எதிர்ப்பாராத விதமாக இந்தியா தோற்று விட்டது. 322 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடிமான இலக்குடன் களமிறங்கியது இலங்கை. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவும் ஜொலிக்காததால், வேகப்பந்து வீச்சாளர்களை அசால்ட்டாக மெரித்தது இலங்கை. இந்த காரணத்தினால், 322 ரன் சேஸ் செய்தது.
முக்கிய புள்ளிகள்:
தற்போது துணைக்கண்டம் இல்லாத அணியுடன் விளையாடப்போவதால், அணியில் அஸ்வின் வர வாய்ப்பு இருக்கிறது. இதனால், ஹர்டிக் பாண்டியா அல்லது கேதார் ஜாதவ், அஸ்வினுக்கு வழி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாதவை உட்காரவைப்பது, கண்டிப்பாக இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பாதிக்கும்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் சொல்லிக்கொள்ளும் படி உமேஷ் யாதவும் பந்துவீச வில்லை. இதனால், வாழ்வா சாவா போட்டியில் முகமது ஷமி, உமேஷ் யதாவுக்கு பதிலாக அணிக்கு திரும்புவார். 47 போட்டிகளில் 87 விக்கெட் எடுத்துள்ள ஷமி, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கும் அணி:
ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜேஸ்ப்ரிட் பும்ரா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார்.