இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக சண்டிகா ஹத்துருசிங்காவை நியமிக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன. இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சண்டிகா ஹத்துருசிங்கா தற்போது நடந்து வரும் இந்திய சுற்றுப்பயணம் முடிந்ததும் அவரை நியமிக்க போவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அடுத்த வாரம் கொலோம்போவிற்கு சண்டிகா ஹத்துருசிங்கா வருவார், மற்ற நடவடிக்கைகளை அங்கே எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி தெரிவித்தார்.
“அனைத்தும் நன்றாக நடந்து கொண்டிருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் அடுத்த வாரம் கொலோம்போவிற்கு வருவார், மற்ற நடவடிக்கைகளை அங்கே எடுக்கப்படும். அவருடைய பங்களிப்பை ஏற்றுக்கொண்டார் முன்னாள் பயிற்சியாளர். தற்போது அவருடைய ஒப்பந்தங்களை வழக்கறிஞ்சர்களுக்கு அனுப்பியுள்ளோம். நாம் எல்லோரும் சேர்ந்து இருக்கிறோம், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்,” என அதிகாரி கூறினார்.
இந்த முடிவுகளால் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு தான் பின்னடைவு. வங்கதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சண்டிகா ஹத்துருசிங்கா தொடர்ந்து வேலை செய்வார் வங்கதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கொண்டுள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியதுடன் ராஜினாமா கடிதத்தை அக்டோபர் மாதமே சண்டிகா ஹத்துருசிங்கா கொடுத்துவிட்டார். ஆனால், 2019 உலகக்கோப்பை வரை சண்டிகா ஹத்துருசிங்காவை வைத்திருக்க வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் நினைத்துள்ளது.
இன்னொரு பக்கம், இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த கிரகாம் போர்ட் ஜூன் மாதம் ராஜினாமா செய்தார், அதன் பிறகு இலங்கை அணி தலைமை பயிற்சியாளர் இல்லாமல் தான் விளையாடி வருகிறார். இதனால், ஜூனியர் இலங்கை அணியின் பயிற்சியாளரை வைத்து இலங்கை அணி விளையாடி வருகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு சண்டிகா ஹத்துருசிங்கா கையெழுத்திட்டால், அவருடைய வேலை அடுத்த வருடம் வங்கதேச தொடரில் இருந்து தான் தொடரும்.
சண்டிகா ஹத்துருசிங்கா பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு வங்கதேச கிரிக்கெட் அணி சிறப்பாக செயல் பட்டு வருகிறது. அவர் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்ற பிறகு, கடந்த மூன்று வருடத்தில் 2015 உலகக்கோப்பையில் குவார்ட்டர்-பைனல் போட்டிக்கு சென்றது, 2017 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கு சென்றது, அது மட்டும் இல்லாமல் இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுடன் ஒருநாள் தொடரையும் வென்றது. அத்துடன் சொந்த மண்ணில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளிடம் முதல் டெஸ்ட் போட்டியை வென்றது, இலங்கைக்கு சென்று இலங்கை அணியிடம் டெஸ்ட் போட்டியை வென்றது.