இந்திய அணியின் நட்சத்திர தொடக்கவீரர் விரேந்தர் சேவாக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், ட்விட்டரில் கலக்கி கொண்டு வருகிறார். கிரிக்கெட் வீரர்களின் பிறந்தநாளை ஒரே ட்வீட்டால் அந்த நாளை ஞாபகம் வைத்துக்கொள்ளும் படி செய்வார். ஆனால் கடைசியில் அவருக்கே ஒரு சிறப்பான ட்வீட் ஒன்று வந்து சேர்ந்தது.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால், அவருடைய பங்காளி சிறப்பான வழியில் ட்வீட் செய்து அசத்தினார்.
விரேந்தர் சேவாகிற்கு வந்த வாழ்த்துக்கள் ஒரே வரியில் இருந்தாலும், அவர்களுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ரிப்ளை செய்து ஜாலியாக கொண்டாடினார் விரேந்தர் சேவாக்.
அனைவரும் சேவாக்கின் பிறந்தநாளை ஜாலியாக கொண்டாடி கொண்டிருந்த போது, அதிர்ச்சிகரமான ட்வீட்டுடன் வந்தார் சச்சின் டெண்டுல்கர்.
“.ǝɯ ɯoɹɟ ǝuo s,ǝɹǝɥ os. pןǝıɟ uo noʎ pןoʇ ǝʌɐɥ ı ʇɐɥʍ ɟo ɐʇןn ǝuop sʎɐʍןɐ ǝʌ,noʎ ˙ɹɐǝʎ ʍǝu ǝɥʇ oʇ ʇɹɐʇs ʇɐǝɹƃ ɐ ǝʌɐɥ ¡nɹıʌ ‘ʎɐpɥʇɹıq ʎddɐɥ.” என அவர் செய்தார்.
இதை முதல் முறை பார்க்கும் போது அனைவரும் குழம்பி விட்டார்கள். இது வேறு எதுவோ மொழி என அனைவரும் நினைத்தார்கள். ஆனால், சேவாக்கை வாழ்த்த ஈஸியான வழியில் வந்தார் சச்சின்.
ஆங்கில வார்த்தையை அவர் அப்டியே தலைகீழாக எழுதியுள்ளார்.
அதை கண்டுபிடிப்பது எளிது தான், அவர் கூறியது: ““Happy birthday, Viru. Have a great start to the new-year. You’ve always done ulta of what I have told you on field. So here’s one from me.”
இந்திய அணியின் சூப்பர்ஸ்டார்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்தர் சேவாக் ஆகியோர் ஒன்றாக 121 போட்டிகளில் இந்திய அணிக்காக தொடக்கவீரர்களாக களமிறங்கி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் 5328 ரன் சேர்த்துள்ளார்கள். அதில் 15 சதம் மற்றும் 22 அரைசதம் அடங்கும்.
ஆனால், சச்சினுக்கு முன்பு சேவாக்கின் நெருங்கிய தொடக்கவீரர் கவுதம் கம்பிர் உள்ளார். 151 போட்டிகளில் சேவாக் மற்றும் கம்பிர் தொடக்கவீரர்களாக களமிறங்கியவர்கள் 7183 ரன் அடித்துள்ளார்கள்.
சச்சினின் வாழ்த்தை பார்த்ததும், தாமதம் செய்யாமல் உடனே நன்றி கூறினார் விரேந்தர் சேவாக்.
Thank you God ji ??Uparwala sab dekh raha hai, yeh to suna tha, par aaj samajh aaya, woh neeche waalon ke liye likhta kaise hai ! https://t.co/stdodewNuJ
— Virender Sehwag (@virendersehwag) October 20, 2017