லண்டன் : பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், தென் ஆப்ரிக்காவின் கேப்டன் டனே வன் நைக்கர்க் ரன் எதுவும் கொடுக்காமல் 4 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒரு முறை லீக் போட்டியில் மோதும்.
நேற்று நடந்த வெ.இ அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த வெ.இ அணி 25.2 ஓவரில் 48 ரன்களை மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து விளையாடிய தெ. ஆ அணி வெறும் 6.2 ஓவரில் 51 ரன்களை எடுத்து எளிய வெற்றியை பெற்றது.
4 விக்கெட், 0 ரன்:
இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா கேப்டன் டனே வன் நைக்கர்க் ரன் எதுவும் கொடுக்காமல் 4 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவர் மொத்தம் 3.2 ஓவர்கள் வீசி ரன் எதுவும் கொடுக்காமல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
https://www.youtube.com/watch?v=3-4wYxY_Wlw
Outstanding – @danevn81 and @kappie777 today achieved the two best bowling figures for @OfficialCSA at the Women's World Cup! #WWC17 pic.twitter.com/O7QHBUV2En
— ICC (@ICC) July 2, 2017
இவரின் சாதனை இதுவரை ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் படைக்கப்படாது புது சாதனையாகும்.