டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையை அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் வாரியம். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 117 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதற்கு பிறகு, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளார்கள்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஹோப் மற்றும் சேஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். 90* மற்றும் 44 ரன்னை ஹோப் அடிக்க, 31 மற்றும் 95 ரன்னை சேஸ் அடித்தார், இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 219 மற்றும் 373 ரன்கள் குவித்தது. இதனால், டெஸ்ட் தரவரிசையில் ஹோப் 24வது இடத்திலும், சேஸ் 37வது இடத்திலும் உள்ளார்கள்.
23 வயதாகும் ஷான் ஹோப் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். இங்கிலாந்து தொடரின் போது டெஸ்ட் தரவரிசையில் 99வது இடத்தில் இருந்த அவர், அந்த தொடர் முடியும் போது 30வது இடத்தில் இருந்தார்.
தெறி பார்மில் விளையாடி கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹோப், ஜிம்பாப்வே தொடர் முடிவதற்கு முன்பு டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் முதல் 20 இடத்தில் ஏதேனும் ஒரு இடத்தை பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அற்புதமாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற செய்த தேவேந்திர பிஷூ, நான்கு இடம் முன்னேறி தற்போது 21வது இடத்தில் உள்ளார். இதுவரை அவர் முதல் 20 இடத்தில் இருந்ததில்லை. அவர் இதே போன்று சிறப்பாக பந்துவீசினால் , முதல் 20 இடத்தில் காலை எடுத்து வைத்து விடுவார்.
ஆல்-ரவுண்டர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சேஸ் மற்றும் பிஷூ ஆகியோர் முன்னேறியுள்ளார்கள். சேஸ் 16வது இடத்திலும் பிஷூ 21வது இடத்திலும் உள்ளார்கள்.
ஜிம்பாப்வே அணி தரப்பில் மசகட்ஸா 49வது இடத்திலும் ப்ரெண்டன் டெய்லர் 37வது இடத்திலும் உள்ளார்.
ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை (வெஸ்ட் இண்டீஸ் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்ததுக்கு பிறகு, அக்டோபர் 25ஆம் தேதிக்கு பிறகு)
டாப் 10 பேட்ஸ்மேன்:
1. ஸ்டீவ் ஸ்மித்
2. ஜோ ரூட்
3. கேன் வில்லியம்சன்
4. செதேஸ்வர் புஜாரா
5. டேவிட் வார்னர்
6. விராட் கோலி
7. ஹசிம் அம்லா
8. லோகேஷ் ராகுல்
9. அஜிங்க்யா ரஹானே
10. அசார் அலி
டாப் 10 பவுலர்:
1. ஜேம்ஸ் ஆண்டர்சன்
2. ரவீந்திர ஜடேஜா
3. காகிஸோ ரபாடா
4. ரவிச்சந்திரன் அஸ்வின்
5. ரங்கனா ஹெராத்
6. ஜோஷ் ஹெசல்வூட்
7. நாதன் லியோன்
8. டேல் ஸ்டெய்ன்
9. நெய்ல் வாக்னர்
10. ஸ்டுவர்ட் ப்ரோட்
டாப் 5 ஆல்-ரவுண்டர்:
1. ஷகிப் அல் ஹசன்
2. ரவீந்திர ஜடேஜா
3. ரவிச்சந்திரன் அஸ்வின்
4. பென் ஸ்டோக்ஸ்
5. மொயீன் அலி