டெல்லி அணியின் இளம் வீரர்கள் மீது இன்னும் நம்பிக்கை உள்ளதாக டெல்லி அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
தற்போது இந்தியாவில் டி20 தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகரமாக 10-வது தொடர் நடந்துகொண்டு வருகிறது. இதில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, 2 வெற்றியும், 4 தோல்வியும் கண்டு, புள்ளி பட்டியலில் 6வது இடத்தில உள்ளது.
லீக் போட்டியின் முடிவில் முதல் நான்கு இடம் பிடித்திருக்கும் அணிகள் தான், அடுத்த சுற்றான பிலே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும். இந்நிலையில் அடுத்த சுற்றுக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி தகுதி பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ராகுல் டிராவிட்.
“ஐபிஎல் கிரிக்கெட் தற்போது பாதி நிலையே எட்டியுள்ளது. அதனால் தற்போது டெல்லி அணி 6வது இடத்தில் உள்ளதைப்பற்றி விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. ஆனால், ரன்ரேட் அடிப்படையில் பார்த்தால், கொல்கத்தா அணிக்கு அடுத்தபடியாக டெல்லி அணியே உள்ளது. டெல்லி அணி இளைஞர்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. எஞ்சியுள்ள போட்டிகளில் அவர்கள் இதை நிச்சயமாக மாற்றுவார்கள்,” என ராகுல் டிராவிட் கூறினார்.