ட்ராவிட் எனக்கு உதவவில்லை, தோனி எனக்கு ரிப்ளை கூட செய்யவில்லை 1
In 2013, the 34-year-old pacer Sreesanth was handed over a life ban by the BCCI after the 2013 Indian Premier League (IPL) spot-fixing scandal surfaced and forced the Board to act swifty.
ட்ராவிட் எனக்கு உதவவில்லை, தோனி எனக்கு ரிப்ளை கூட செய்யவில்லை 2
India Cricket player Shanthakumaran Sreesanth, left, reacts after taking the wicket of Ashwell Prince, unseen, during the third Test against South Africa played in Cape Town, South Africa, Monday, Jan. 3, 2011. (AP Photo/Schalk van Zuydam)
2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியின்போது ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சண்டிலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது. ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரை விடுவித்து டெல்லி கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.

Cricket, India, BCCI, Sreesanth, Chennai Super Kings, Rajasthan Royals
Cricket, India, BCCI, Sreesanth, Chennai Super Kings, Rajasthan Royals

இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை எதிர்த்தும் ஸ்ரீசாந்த் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது தடையை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்த வழக்கில் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை உறுதி செய்து கேரள ஐகோர்ட்டின் பெஞ்ச் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆயுட்கால தடையை நீக்க கோரி கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக ஸ்ரீசாந்த் சமீபத்தில் அறிவித்தார்.

ட்ராவிட் எனக்கு உதவவில்லை, தோனி எனக்கு ரிப்ளை கூட செய்யவில்லை 3
New Delhi: Cricketer S Sreesanth talks on phone outside the Patiala House Courts in New Delhi after a trial court discharged him in the Indian Premier League 2013 spot-fixing scandal on Saturday. Sreesanth and 41 others have been discharged by the court in the case. PTI Photo by Vijay Verma (PTI7_25_2015_000152B)

அதோடு ஸ்பாட்பிக்சிங் சூதாட்ட விவகாரத்தில் 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், ஆனால் கிரிக்கெட் வாரியம் தனக்கு எதிராக மட்டுமே ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட விவகாரத்தில் டிராவிட்டும், டோனியும் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீசாந்த் கூறியதாவது:-

ட்ராவிட் எனக்கு உதவவில்லை, தோனி எனக்கு ரிப்ளை கூட செய்யவில்லை 4

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக இருந்த ராகுல் டிராவிட் என்னை பற்றி நன்கு அறிந்தவர். அப்படி இருந்தும் அவர் எனக்கு ஆதரவு தரவில்லை. டோனிக்கு உணர்வுபூர்வமாக தகவல் அனுப்பி இருந்தேன். அதற்கும் அவர் பதில் அனுப்பவில்லை.

டெல்லி போலீசார் 16 அல்லது டாப் 10 இந்திய வீரர்கள் மீது குற்றம்சாட்டி இருந்தனர். இதில் 6 பேர் பெயர் வெளியாகி இருந்ததால் கிரிக்கெட் விளையாட்டை உண்மையாக பாதித்து இருக்கும்.

பி.சி.சி.ஐ. தேசிய அணி அல்ல. தனியார் நிறுவனம். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் விளையாடுவேன். விளையாட அனுமதிக்காவிட்டால் வேறு நாட்டுக்காக ஆடுவேன்.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *