Cricket, India, New Zealand, Rohit Sharma, Trent Boult

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்டின் பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலானது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றிய இந்தியா, நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வெற்றியுடன் தொடங்க விரும்புகிறது.

டிரென்ட் போல்ட் பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்: ரோகித் சர்மா சொல்கிறார் 1

இந்த தொடருக்கு முன்னோட்டமாக நியூசிலாந்து இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. ஒரு போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக இருப்பார் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் டிரென்ட் போல்ட் பந்து வீச்சை சமாளிப்பது சவாலாக இருக்கும் என இந்திய துணைக் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு டிரென்ட் போல்ட் மிகப்பெரிய சவாலாக இருப்பார். போல்ட் நியூசிலாந்தின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர். அது எங்களுக்கு சவாலை கொடுக்கும்.

கடந்த முறை அவர்களுடன் நாங்கள் விளையாடியுள்ளோம். இதனால் நியூசிலாந்து அணியினர் என்ன செய்வார்கள்? மற்றும் அவர்களின் திறமை குறித்து எங்களுக்குத் தெரியும். இடது கை வேகப்பந்து வீச்சாளர் மட்டுமல்ல, அவர்களுடைய ஒட்டுமொத்த பந்து வீச்சு யூனிட்டையும் பார்க்கிறோம். சரியான போட்டியை கொடுக்கக்கூடியது அவர்களது பந்து வீச்சு’’ என்றார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *