கடந்த மாதம் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்தது. அந்த போட்டியின் போது என்னை இந்திய வீரர்கள் வம்பிழுத்தார்கள் என பாகிஸ்தானின் அதிரடி வீரர் பாகர் ஜமான் கூறினார். சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் ஜமான் 106 பந்துகளில் 114 அடிக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 338 ரன் அடித்தது. பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 180 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியை முதல் முறையாக வென்றது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இந்திய அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டினார் பாகர் ஜமான். ஆனால், அதே நேரத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு கடினமான நேரத்தை கொடுத்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. அந்த போட்டி முழுவதும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விராட் கோலி பிரஷர் தர நினைத்தார் என பாகிஸ்தான் வீரர் பாகர் ஜமான் கூறினார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேஸ்ப்ரிட் பும்ராவும் ஜமானிடம் வாய் விட்டதாக ஜமான் கூறினார். ஜமான் 3 ரன்னில் விளையாடி கொண்டிருக்கும் போது பும்ரா வீசிய பந்து அவரது பேட் முனையில் பட்டு தோனியிடம் சென்றது, அப்போது பும்ரா வம்பிழுத்ததாக ரீபிலேவில் தெரிந்தது.
“நானும் அசார் அலியும் விளையாடி கொண்டிருக்கும்போது “இவர்களில் ஒரு விக்கெட் எடுத்தா போதும், மத்தவங்கள சப்பையா முடிச்சிடலாம்,” என விராட் கோலி கூறியதாக ஜமான் தெரிவித்தார்.
“பிறகு இப்பவே நீங்க ரன் அடிச்சிக்கோங்க, இன்னும் எவளோ நேரம் இது மாதிரி விளையாட போறீங்க,” என விராட் கோலி பேசிக்கொண்டே இருந்ததாக சாமான் கூறினார்.
“உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் விதிமுறையை மீறவில்லை. கிரிக்கெட் சம்மந்தப்பட்ட செயல்கள் தான் செய்தார்கள். அனைவருமே தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைப்பார்கள்,” என ஜமான் தெரிவித்தார்.