கொல்கத்தாவில் பிறந்த சவுரவ் கங்குலி இந்திய அணிக்கு கிடைத்த வரம் என்றும் சொல்லலாம். இந்திய அணி பிரச்சனையில் இருந்த போது இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்று இந்திய அணியை நல்ல பாதைக்கு அழைத்து சென்றார். அவரது தலைமையில் இந்திய அணி பல வலிமையான அணிகளையும் தோற்கடித்து, பலமான அணியாக உருமாறியது. எங்கு சென்றாலும் வெற்றி பெறும் அணியாக மாற்றினார் கங்குலி. இந்திய அணியின் கேப்டனாக அதிக டெஸ்ட் வெற்றிகளை (21) பெற்றிருந்தார் , அதன் பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி அதை பின்னுக்கு தள்ளியது.
2008ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், இதே விளையாட்டுக்கு மேலும் பங்களித்தார். மறக்க முடியாத சில நல்ல சம்பவங்களை தனது ரசிகர்களிடையே கூறுவார் சவுரவ் கங்குலி. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில், இந்திய அணியின் கேப்டனாக அவரது கடினமான முடிவு என கூறினார்.

2003ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. 2003ஆம் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. உலககோப்பையின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட இருக்கும் போது, அதிர்ச்சி முடிவை எடுத்தார் கேப்டன் சவுரவ் கங்குலி.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி விளையாடும் 11 வீரர்களின் பெயரில் இருந்து அனில் கும்ப்ளே பெயரை நீக்கினார் கங்குலி. இன்றும் கூட அந்த சம்பவம் இந்திய ரசிகர்கள் மனதில் இருக்கும். இதனால், இந்திய பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலிய அணி, உலககோப்பையையும் வென்றது. அந்த இறுதி போட்டி முடிந்த பிறகு, ஹர்பஜன் சிங்குக்கு பல முறை வழி விட்டார் அனில் கும்ப்ளே. ஆனால், கேப்டனாக இருந்து அனில் கும்ப்ளேவை வெளியே உட்கார வைப்பது தான் கடினமான முடிவு என கூறுகிறார் சவுரவ் கங்குலி.
“பதினோரு பேரில் இருந்து அனில் கும்ப்ளேவை நீக்குவது தான் கடினமான முடிவு. அவர் ஒரு சிறந்த வீரர், இதனால் அவரை வெளியே உட்கார வைப்பது தான் கடினமான முடிவு,” என கங்குலி தெரிவித்தார்.