ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரை கிரிக்கெட் விளையாட 1 வருடத்திற்கு தடை செய்ததால், இன்னொரு கேப்டனை தேர்வு செய்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் குழம்பியுள்ளது. தற்போதைக்கு, நான்காவது டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக டிம் பெயினை கேப்டனாக அறிவித்துள்ளார்கள்.
இந்த ஜூன் மாதம் இங்கிலாந்துடன் விளையாட இருப்பதால், ஆஸ்திரேலிய அணி கூடிய விரைவில் நிரந்தர கேப்டனை அறிவிக்கும் என தெரிகிறது. ஸ்டீவ் ஸ்மித் இல்லாத காரணத்தினால், புதிய கேப்டனே 2019 உலகக்கோப்பையிலும் கேப்டனாக செயல் பட வேண்டும்.
கேப்டன் பதவிக்கு போட்டி போடும் நான்கு வீரர்களை தற்போது பார்ப்போம்:
ஆரோன் பின்ச்
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் ஆரொன் பின்ச் இந்த கேப்டன் பதவியை தட்டி செல்வார் என்று தெரிகிறது. இதற்கு முன்பு அவர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு கேப்டனாக இருந்திருப்பதால், இவரை கேப்டனாக நியமிக்கலாம்.
அவர் பேட்டிங்கில் தெறி பார்மில் இருப்பதால், கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட காத்திருப்பார். 2013ஆம் ஆண்டு ஒருநாள் அணிக்கு அறிமுகம் ஆன ஆரோன் பின்ச், 88 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3200 ரன் அடித்திருகிறார். ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினால், அவர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆக வாய்ப்பும் கிடைக்கும்.
கிளென் மேக்ஸ்வெல்
சில நாட்களுக்கு முன்பு இவர் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிப்பாரா என்று அனைவரும் கேள்வியெழுப்பினார். ஆனால், கடின உழைப்பால் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ள மேக்ஸ்வெல், ஒருநாள் அணியின் கேப்டனாக போட்டியிடுகிறார்.
81 போட்டிகளில் விளையாடியுள்ள கிளென் மேக்ஸ்வேல் 2069 ரன் அடித்து, 45 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இவரை கேப்டனாக நியமித்தால் கண்டிப்பாக அவருடைய எதிர்காலம் மற்றும் அணியின் எதிர்காலம் பற்றியும் யோசிப்பார்.
மிட்சல் மார்ஷ்
டெஸ்ட் அணியின் கேப்டனாக மிட்சல் மார்ஷை நியமிப்பார்கள் என நினைக்கும் போது, டிம் பெயினை கேப்டனாக அறிவித்தார்கள். ஆனால், கேப்டன் பதவியில் டிம் பெயின் நீடிப்பாரா என்று தெரியவில்லை.
ஒருநாள் அணிக்கு கேப்டனாக செயல்படும் வாய்ப்பும் இவரிடம் இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் கம்பேக் கொடுத்த பிறகு, மிட்சல் மார்ஷ் அற்புதமாக செயல் பட்டு வருகிறார். 2011ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆன மார்ஷ் 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
மார்க்கஸ் ஸ்டோனிஸ்
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி சில மாதங்களே ஆனாலும், கேப்டன் பதவியில் இருந்து சிறப்பாக செயல்படும் வல்லமை படைத்தவர் மார்க்கஸ் ஸ்டோனிஸ்.
அவரது இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ரிச்சர்ட் அட்லீ டிராபியில் 287 ரன் சேஸ் செய்ய 146 ரன் அடித்து அவரது அணிக்கு உதவி செய்தார். அந்த போட்டியின் போது ஸ்டோனிஸ் ரன்-அவுட் ஆகியதால், அவரால் போட்டியை முடிக்க முடியவில்லை. ஆனால், அந்த ஆட்டத்திற்காக அவரை அனைவரும் பாராட்டினார்கள்.