இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் சில தோலை தொடர்பு சாதனங்களை உபயோகிக்க வீரர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு முன்பு ஐபில் போட்டியில் இது போன்ற சாதனங்களை உபயோகிக்க தடை விதிதிருந்தது.
பிசிசிஐ நிர்வாகம் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுவதை தடுக்க சில நிபந்தனைகள் மற்றும் கட்டளைகள் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் வீரர்கள் செய்ய வேண்டியது செய்ய கூடாதது அனைத்தையும் பட்டியல் இடப்பட்டிருந்தது.
மேலும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் முதல் நாளில் ஸ்மார்ட் வாட்சுகள் உபயோகித்தனர். இது அறிந்த ஐசிசி நிர்வாகம். அவர்களை அழைத்து எச்சரித்து அனுப்பியது.
ஸ்மார்ட் வாச்சுகளில் உள்ள வைபை வசதி மூலம் தகவல் பரிமாற்றம் எளிதில் நிகழும் வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் மேட்ச் பிக்ஸிங் நிகழ அதிக வாய்ப்பு நாமாகவே ஏற்படுத்தி கொடுக்க முயலும் என்பதால் இதை மேச்சின் போது உபயோகிக்க தடை விதித்து அறிவித்துள்ளது.
வீரர்கள் மேச்சின் போது மட்டுமல்ல, ட்ரெஸ்ஸிங் ரூமிலும் உபயோகிக்க அனுமதி இல்லை. பஸ்சை விட்டு இறங்கும் பொழுதே அணி பொருப்பாளரிடம் ஒப்படைத்து விட வேண்டும். இதனை மீறினால் வாழ்நாள் தடை விதிக்க கூட நிர்வாகம் தயங்காது என வீரர்களை கடுமையாக எச்சரித்துள்ளது பிசிசிஐ நிர்வாகம்.
இந்த விதி, இனி வரும் ஐசிசி போட்டிகள் அனைத்திற்கும் பொருந்தும் என ஐசிசி நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த தடையை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இனி வேனும் ஐபில் தொடரிலும் இந்த தடை நீடிக்கும் என ஐபில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வீரர்களுக்கு அம்பயர் மற்றும் நிர்வாகத்திடம் தொடர்பு கொள்ள வாக்கி-டாக்கி வழங்கப்படும். அதை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தது. இந்த சேவை 24 மணி நேரமும் நீடிக்கும் என கூறியது.
வீரர்கள் முழு வீச்சுடன் ஊழல் தடுப்பு பிரிவால் கவனிக்கப்படுவர் என அதிரடியாக அறிவித்தது பிசிசிஐ நிர்வாகம்.